Friday, 1 April 2011

நாணயச்சாலை

                                                           நாணயச்சாலை

                                                    செஞ்சி அருகே கண்டுபிடிப்பு

செஞ்சி அருகே ஆலம்பூண்டியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் பாக்கம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள இயற்கையால் அமைந்த குகை பரப்பில் நாணயச் சாலை (Minting)  நடைபெற்று வந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன.
உலோகங்கள் உருக்கும் போது ஏற்படும் வெப்பத்தால் குகையின் உட்புறப் பகுதி குழியாகவும் மேடாகவும் மாறி மாறி காட்சி தருகின்றது.
ஏரி களிங்கலுக்குச் செல்லும் வழியில் எட்டு வரிகளைக் கொண்ட கல்வெட்டு சிதைந்து காணப்படுகின்றது. 16-ஆம் நூற்றாண்டு நாயக்கர் காலமாக  இது கருதப்படுகிறது.

“ ஜெய வருஷம் அற்ப்பசி மாதம் மகா மண்டலேசுவரர்  யாலய  தேவர் மகேஸ்வர்க்கு செய்வித்த விக்கினராசா அக்காசாலை.....
என்ற கல்வெட்டு செய்தி நாணயச்சாலையை உறுதி செய்கிறது.

பண்டைய நாணயங்கள்:

திருக்கோவிலூரில் பெண்ணையாற்று ஓரம் மலையமானின் செப்புக்காசுகள் ( காரி என்னும் எழுத்துப் பொறிப்புடன்) நாணய ஆய்வாளர் தினமலர் கிருட்டிணமூர்த்தி, தஞ்சை ஆறுமுக சீத்தாராமன், டாக்டர் அழகிரி ஆகியோர் கண்டெடுத்துள்ளனர்.

பிற்கால பொற்காசு, வெள்ளிக்காசு, செட்டிக்காசு, முத்திரை மோதிரம் போன்றவை இதில் கண்டெடுத்துள்ளனர்.

மூவேந்தர், குசானர், சாதவாகனர் காசுகளும் திருக்கோவிலூர் அருகே கரையாப்பட்டு என்ற இடத்தில் கிடைத்துள்ளது. இது அப்பகுதியின் வாணிப வளர்ச்சியைக் குறிக்கின்றது.

………தமோதரன் எழுதிய விழுப்புரம் மாவட்ட வரலாறு

No comments:

Post a Comment