Friday 22 July, 2011

விழுப்புரம் தமிழ் விழா - 31-07-2011


தமிழ்எங்கள் உயிர்என்ப தாலே -வெல்லுந்
தரமுண்டு தமிழர்க் கிப்புவி மேலே!



விழுப்புரம்
தமிழ்வளர்ச்சி  இயக்கம்
நிகழ்த்தும்....


தமிழ் விழா


         திருவள்ளுவராண்டு 2042 கடகத்திங்கள்   (31-07-2011)
                     ஞாயிறு காலை 9.30 மணி

                      வி.ஆர்.பி மேனிலைப் பள்ளி
                      அரங்கநாதன் சாலை
                        (கல்யாண் திரையரங்கு எதிரில்)
                        விழுப்புரம்.


அன்புசான்ற தமிழ்ப்பெரியீர்!

வணக்கம். மொழி நம் அகத்தின் விழி. மொழி அழிந்தால் மொழிபேசும் இனம் அழியும். அவ்வின மக்கள் வாழும நாடும் அழியும் என்பது நிகழ்கால வரலாறு கண்ட உண்மையாகும். தாய்மொழி வழியில் கல்வி கற்பது என்பதுதான் எளிமையானதும் இயற்கையானதும் அறிவியல்பூர்வமானதுமாகும்.

நம் தாய்மொழியாகிய தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாயாக விளங்குவதாகும். தமிழே உலகின் எம்மொழிக்கும் மூத்த  முதன்மொழியாகும். அந்த பெருமைûயும் உண்மையையும் உணராமல் கிடக்கின்றோம்.

தமிழை தெய்வத்திற்கு இணையாகப் போற்றியவர்கள் நாம். தெய்வத் தமிழ் என்றும் ஞாலமளந்த மேன்மைத் தமிழ் என்றும் திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் போன்ற பக்திப்பெரியோர் பாடியுள்ளனர்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தைபெரியார், புரட்சிப்பாவலர் பாவேந்தர் போன்ற தலைவர்களும் தமிழறிஞர்களும் பெண்கல்வி மற்றும் தாய்மொழிவழிக் கல்வி வளர்ச்சிக்குப் பெரும்பாடாற்றியுள்ளனர். அவ்வழியே யாமும் பயணிக்கின்றோம்.

அதன்ஒருபடியாகவே விழுப்புரம் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியில் தாய்மொழியாம் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு பத்தாம் வகுப்பு மற்றும பனிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் பள்ளி அளவில் உயர்ந்த மதிப்பெண்கள் மற்றும் தமிழ் மொழிப்பாடத்தில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவியர்க்கு பரிசுகள் வழங்கி பாராட்டி ஊக்கப்படுத்திட விழைகின்றோம்.

இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்வைத் தொடர்ந்திடத் திட்டமிட்டுள்ளோம்.

செட்டிநாடு ஏம்பல் அண்டக்குடி நகரத்தார் சமுதாயத் தமிழ்ப்பெரியோர்கள் இவ்வரிய தமிழ்த்தொண்டிற்குத் தொடர்ந்து துணை நிற்க முன்வந்திருப்பதை நன்றியோடு வரவேற்கின்றோம்.

இத்தமிழ் விழாவிற்குத் தாங்கள் தங்கள் நட்புச் சுற்றத்தோடு வருகைதந்து தமிழ்வளர்க்கும் எம் எளிய முயற்சிக்குத் துணைநிற்குமாறு விழைந்து அழைக்கின்றோம்.



நிகழ்வு முறை

வரவேற்புரை :
செல்வி சி.முத்துதிவ்ய வள்ளி அறி.மு (கணினி அறிவியல்)

தலைமை:

தமிழ்த்திரு. தமிழநம்பி
ஒருங்கிணைப்பாளர்- பாடல்வளாகம்.

முன்னிலை
தமிழ்த்திருவாளர்கள்

மரு. சி.மா.பாலதண்டாயுதம்          விழுப்பரையனார்
சி.அப்பாவு                                         இரா.சக்கரை
எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன்     வெ.சங்கரநாராயணன்
வி.சோழன்                                        செ.த.க. கந்தன்
வழக்குரைஞர் அ.ரஸ்கின்ஜோசப்             விஜயராணி கவுதமன்


கல்வி ஊக்கத்தொகையை வழங்கும்
செட்டிநாட்டு ஏம்பல் அண்டக்குடி நகரத்தார் சமுதாய
செல்வப்பெருந்தகையோரை வரவேற்று அறிமுகவுரை

திருவமை. கோ. இராஜபுவேனேஸ்வரி அறி.இ., கல்.இ.

கல்வி வளர்ச்சிக்குத் துணைநிற்கும்
தகைசான்ற  இணையர்க்கு
விருதளித்துப் பாராட்டுரை:

எழுத்தாளர் மருதம் ஆ.இரவிகார்த்திகேயன்

பாராட்டுபெறும் பண்பான இணையர் :
மாண்பமை ஆ.அரு.சுப.கோவிந்தன் (செட்டியார்)
திருவமை சரசுவதி ஆச்சி

மாண்பமை பெ.கு.மு. முத்தய்யா (செட்டியார்) அவர்களின் சார்பாக
மாண்பமை மு.இராஜசேகரன்
திருவமை செல்வி ஆச்சி

தமிழ்த்திரு. அரு.முத்தமிழடியான்
திருவமை அலர்மேல்மங்கை ஆச்சி


விழுப்புரம் அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியில்
தமிழ்வழியில் பயின்று உயர்ந்த மதிப்பெண்கள் பெற்ற
மாணவியர்க்குப் பாராட்டுரை:

பேராசிரியர் பிரபா. கல்விமணி

கருத்துரை

பெண்கல்வியின் பெருமை
எழுத்தாளர் இரா.இராமமூர்த்தி

தாய்மொழக் கல்வியின் தகைமை
பேராசிரியர் த.பழமலய்


நன்றியுரை
திருவமை சி.அன்புச்செல்வி ஆச்சி

ஒருங்கிணைப்புரை:
உங்கள் உலக.துரை




ஒருங்கிணைப்புக்குழு
           
கோ.பாபு                  எழில்.இளங்கோ
                                    பா.சோதிநரசிம்மன்              அ.வீரமணி
                                    கா.தமிழ்வேங்கை               இரா.நா.கிரி
                                    கொ.ப.சிவராமன்                தே.ஏழுமலை
                                    செய.நடராசன்                  வி.பிரபு


                                    தமிழ் என்று தோள்தட்டி ஆடு- இன்பத்
                                    தமிழ்வெல்க வெல்க என்றே தினம் பாடு

தமிழ்வளர்ச்சி இயக்கம்
விழுப்புரம்