Saturday 30 April, 2011

ஆ.இரவிகார்த்திகேயன் எழுதிய நூல்கள் அறிமுகம் ஆய்வு


உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் - திருக்குறள் 394


நூறுபூக்கள்
தமிழ்முயக்கம் -2


ஆ.இரவிகார்த்திகேயன் எழுதிய
நூல்கள் அறிமுகம்  ஆய்வு



திருவள்ளுவராண்டு 2042 மேழம் 18
(01-05-2011) மேதினம்  ஞாயிறு முற்பகல் 10.00 மணி

கலைஞர் அறிவாலயம்- விழுப்புரம்.


நிகழ்வுமுறை:

தலைமை:
மருத்துவர் சி.மா.பாலதண்டாயுதம்
புரவலர்- நூறுபூக்கள்

வரவேற்புரை
இலக்கிய ஆர்வலர் வெ.சங்கரநாராயணன்

முன்னிலை:
பாவலர் ஏ.செயச்சந்திரன்
பாவலர் ஜா.விநாயமூர்த்தி
இலக்கிய ஆர்வலர் தெ.க.எழிலரசன்

அறிமுகவுரை:
பேராசிரியர் த.பழமலய்
புரவலர் - நூறுபூக்கள்

நூல்கள் ஆய்வு

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
பேராசிரியர் மா.சற்குணம்
மேனாள் முதல்வர் - மயிலம் தமிழ்க் கல்லூரி


தெய்வம் துணைகொள்
எழுத்தாளர் நெய்வேலி சவகர்

புதிய தாய்
திரைப்பட இயக்குனர் 
திரு.வி.சேகர்

ஏற்புரை:
ஆ.இரவிகார்த்திகேயன்

நன்றியுரை:
இலக்கிய ஆர்வலர் வ.பன்னீர்செல்வம்





Friday 1 April, 2011

தலையை அரிந்து கொண்ட பக்தன்

                               சிவன்கோயில் கட்டிடம் இடிந்து விழாமல் இருக்க
                                       தலையை அரிந்து கொண்ட பக்தன்

அரங்கண்டநல்லூரில் தென்பெண்ணை நதியோரம் உள்ள பாறையில் ஒப்பில்லா\மணி நாதர் கோவில் உள்ளது. இக்கோயிலில் நாட்டிய மண்டபம் கட்டும்போது பலமுறை இடிந்து விழுந்து நிறைவடையாமல் இருந்தது. பின்னர் அப்பணி முடிவடைந்ததும் அவ்வூர் தேவரடியார் மகன் மதிசூடினான் என்பவன் தன் தலையை தானே அரிந்து கொண்டு பலியானதாகவும் அவனது குடும்பத்திற்கு ஊரார் மானியம் அளித்த செய்தியை சுந்தர பாண்டியனின் பத்தாவது ஆட்சிக்கல்வெட்டு ( 13ஆம் நூற்றாண்டு) தெரிவிக்கின்றது

நாணயச்சாலை

                                                           நாணயச்சாலை

                                                    செஞ்சி அருகே கண்டுபிடிப்பு

செஞ்சி அருகே ஆலம்பூண்டியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் பாக்கம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள இயற்கையால் அமைந்த குகை பரப்பில் நாணயச் சாலை (Minting)  நடைபெற்று வந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன.
உலோகங்கள் உருக்கும் போது ஏற்படும் வெப்பத்தால் குகையின் உட்புறப் பகுதி குழியாகவும் மேடாகவும் மாறி மாறி காட்சி தருகின்றது.
ஏரி களிங்கலுக்குச் செல்லும் வழியில் எட்டு வரிகளைக் கொண்ட கல்வெட்டு சிதைந்து காணப்படுகின்றது. 16-ஆம் நூற்றாண்டு நாயக்கர் காலமாக  இது கருதப்படுகிறது.

“ ஜெய வருஷம் அற்ப்பசி மாதம் மகா மண்டலேசுவரர்  யாலய  தேவர் மகேஸ்வர்க்கு செய்வித்த விக்கினராசா அக்காசாலை.....
என்ற கல்வெட்டு செய்தி நாணயச்சாலையை உறுதி செய்கிறது.

பண்டைய நாணயங்கள்:

திருக்கோவிலூரில் பெண்ணையாற்று ஓரம் மலையமானின் செப்புக்காசுகள் ( காரி என்னும் எழுத்துப் பொறிப்புடன்) நாணய ஆய்வாளர் தினமலர் கிருட்டிணமூர்த்தி, தஞ்சை ஆறுமுக சீத்தாராமன், டாக்டர் அழகிரி ஆகியோர் கண்டெடுத்துள்ளனர்.

பிற்கால பொற்காசு, வெள்ளிக்காசு, செட்டிக்காசு, முத்திரை மோதிரம் போன்றவை இதில் கண்டெடுத்துள்ளனர்.

மூவேந்தர், குசானர், சாதவாகனர் காசுகளும் திருக்கோவிலூர் அருகே கரையாப்பட்டு என்ற இடத்தில் கிடைத்துள்ளது. இது அப்பகுதியின் வாணிப வளர்ச்சியைக் குறிக்கின்றது.

………தமோதரன் எழுதிய விழுப்புரம் மாவட்ட வரலாறு