Wednesday 9 March, 2011

தமிழகத்தின் முதல் ரயில் பாதை

தமிழகத்தின் முதல் ரயில் பாதை
சென்னைக் கடற்கரை விழுப்புரம்:

கி.பி. 1877 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி சென்னைக் கடற்கரை ( மெட்ராஸ் பீச்) யிலிருந்து விழுப்புரம் வரை ரயில் போக்குவரத்து முதன்முதலில் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் முதல் ரயில் போக்குவரத்து இதுவே ஆகும். தற்போதைய நிலையில் உள்ள விழுப்புரம் ரயில் நிலையம் 1931-32ல் கட்டப்பட்டது. மின்சார ரயில் 1927-ல் சென்னை-விழுப்புரம் தடத்தில் இயக்கப்பட்டது. 1921ல் ரயில் போக்குவரத்துக்குரிய தகவல் தொடர்பு இணைப்புகள் அளிக்கப்பட்டன. விழுப்புரம் ரயில்நிலையம் தொடங்கப்பட்ட பிறகுதான் திருச்சி ரயில் நிலையம் உருவானது. விழுப்புரம் ரயில்வேயில் பெருமளவு ஆங்கிலோ இந்தியர்கள் அதிகாரிகளாக பணியாற்றி உள்ளனர்.

No comments:

Post a Comment