Wednesday 9 March, 2011

குகையூர் செந்தமிழ் அறிஞர் அடிகளாசிரியர்

குகையூர் செந்தமிழ் அறிஞர் அடிகளாசிரியர்

1910-ல் பிறந்து தமது 99ஆம் வயதில் இந்தியக் குடியரசு தலைவரால் செம்மொழி உயராய்வு பரிசினைப் பெற்ற  அடிகளாசிரியர் என்ற தமிழறிஞர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ல குகையூர் கிராமத்தைச் சார்ந்தவர். குருசாமி என்ற தமது இயற்பெயரை அடிகளாசிரியர் என்று தமிழ்ப்பற்றால் அழைத்துக் கொண்டார். தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களிடம் மாணவராக கல்வி கற்ற இவர், மயிலம் தமிழ்க் கல்லூரியில் ( 1938-ல்) பேராசிரியராக பணியாற்றினார். சென்னைப் பல்கலைக்கழகத்திலும் தஞ்சைப் பல்கலைக்கழகத்திலும்   பேராசிரியராகப் பணியாற்றினார். மறைமலை அடிகள், திரு.வி.க.வோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். தமிழ், சமஸ்கிருதம், இலக்கணம், சோதிடம் பயின்ற இவர் தமிழ் ஆரியத்தின் அடிச்சியென ஆக்கியதை தவறென்பார். 64 நூல்களை வெளியிட்டுள்ள இவர் ஒவ்வொரு ஊரிலும் உள்ள தமிழ் அமைப்புகள் பழந்தமிழ் நூல்களை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட வேண்டும் என வற்புறுத்துகிறார். கல்வெட்டு ஆய்வுகளில் ஆர்வலராக இருந்துள்ளார். திருவாரூர் தேரழகு, மன்னார்குடி மதில் அழகு, குகையூர் குடங்கழகு என்கிறார்.

குடங்கழகு என்பது கோயில் மேல்தளத்தில் இருந்து தண்ணீர் விழ கட்டத்தின் சுற்றிலும் வளைவான கல்லிலே மரவேலைப்பாடுகள் உள்ள சிறப்பாகும்.
அரிய ஓலைச்சுவடிகளை பாதுகாத்து வரும் இவர் 100 பாடல்களைக் கொண்ட இவரது சிறுவர் இலக்கியத்திற்கு முன்னாள்  குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களால் பாராட்டு கடிதம் பெற்றுள்ளார்.

தொல்காப்பியச் செம்மல், செந்நாப்புலவர், தமிழ்ப்பேரவை செம்மல் எனவும் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தாலும் பாராட்டப்பட்டவர்.

சிறந்த தமிழ் பணியாற்றியதற்காக இவருக்கு 2005-06 ஆம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தொல்காப்பியர் விருதை மத்திய அரசு இவருக்கு செம்மொழி உயராய்வு மூலம் அறிவித்துள்ளது.

முதுபெரும் தமிழ்நூலான தொல்காப்பியத்திற்கு உரை எழுதியுள்ள முதுபெரும் தமிழறிஞர் அடிகளாசிரியர் விழுப்புரம் மாவட்ட மண்ணுக்கும், தமிழுலகத்திற்கும் அழகு என்பதில் தவறில்லை.

-பாரதி அன்பர் இராமமூர்த்தி, விழுப்புரம்.

2 comments:

govindasamy said...

my native place is near kugaioor

unmaivrumbi,
mumbai

அ.சின்னதுரை said...

தங்களின் பதிவு மிக நன்று.

Post a Comment