Wednesday 9 March, 2011

சங்கப்பாடல்கள் கூறும் முள்ளூர்மலை: கல்வராயன் மலையே!

சங்கப்பாடல்கள் கூறும் முள்ளூர்மலை: கல்வராயன் மலையே!
சோழக் கல்வெட்டு ஆதாரம்

கோவலூர்( திருக்கோவிலூரை) தலைநகராகக் கொண்டு ஆண்ட திருமுடிக்காரி யின் முள்ளூர் மலையை பழம்புலவர்கள் பலர் போற்றிப் பாடியுள்ளனர்.
ஆய்வாளர்கள் மத்தியில் முள்ளூர் மலை எனப்படுவது எந்த இடம் என்ற குழப்பத்தில் இருந்த ஆய்வாளர் கொடுமுடி சண்முகம் போன்றவர்கள் செஞ்சி வட்டத்தில் உள்ள  கணக்கன்குப்பம் மலையே காரியின்  முள்ளூர் மலை என்று அறிவித்தார்கள்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள  கல்ராயன் மலையில் காரியாலூரிலிருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ள வெள்ளிமலையில் உள்ள சிவாலயத்தில் பலிபீடம் அருகேயுள்ள பலகைக்கல்லில் மூன்றாம் ராசேந்திர சோழனின் ( கி.பி. 1260) கல்வெட்டு செய்தியில் அப்பகுதி முள்ளூர் கூற்றத்துக்கு உட்பட்ட மதுவூர் பற்றுக்குரிய சிற்றூராகத் தெரிகின்றது.
வெள்ளாறுடையார் செங்காடன் செம்பகன்என்ற கல்வெட்டுச் செய்தி மூலம் காடவ வம்ச வழியானரான செங்காடன் சிற்றரசனாக சோழர்க்குட்பட்டு ஆண்டு வந்ததை அறிய முடிகின்றது.
காரியின் முள்ளூர் மலை சோழர் காலத்தின் வருவாய் கோட்டம் முள்ளூர் கூற்றமாக அறிய முடிகின்றது.

-சி.வீரராகவன், கல்வெட்டு ஆய்வாளர்

No comments:

Post a Comment