Thursday 10 March, 2011

தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு


ஆ.இரவிகார்த்திகேயன்   எழுதிய
                                                      

ஞாயிறு போற்றுதும்….
ஞாயிறு போற்றுதும்.


  


அறிவர் :
எவ்வித அறிவியல் கருவியும் கண்டுபிடிக்காத காலத்தில் அறிவார்ந்தவர்கள் எவ்வளவு பெரிய அறிவியல் செய்தியைக் கண்டு பிடித்து சொல்லியிருக்கின்றார்கள் என்பதை அறியும் போது வியப்பாக உள்ளது.

செந்நீர் சுடரிய ஊழியம் பனியொடு
தண்பெயர்த் தலைஇய ஊழியம்   (பரி – 2)

கதிரவனிடமிருந்து தெறித்து விழுந்த உலகம் நெருப்பாக இருந்து பின் குளிர்ந்து பனிப்படலமாக ஆகிப் பின்னர் பனி உருகி நிலப்பகுதியாகியது என்ற பூமியின் வரலாற்றை- அறிவியல் செய்தியை சுமார் 1500 ஆண்டு;களுக்கு முன் தமிழ்புலவன் பதிய வைத்துள்ளான்.

பண்டைத் தமிழர் உலகம் உருண்டை என்று அறிந்திருந்தனர். உல உல உலகு உலகம் என்ற சொல்லை உருவாக்கினர். ஞாலம் என்ற சொல் ஞாலுதல் -  தொங்குதல் என்ற பொருளில் உலகம் ஞாலம் என்று குறிப்பிடப்பட்டது. எந்தப்பிடிப்பும் இன்றி வான்வெளியில் தொங்கி கொண்டிருப்பதால் ஞாலம் என்றனர். தமிழ் வானவியல் அறிவை விளக்கும் சொற்கள் தமிழில் குவிந்து கிடக்கின்றன.

நுண்ணியம் என்பார் அளக்கும் கோல்
கண் அல்லது இல்லை பிற   (குறள் - 710 )

கண்களையே அளக்கும் கோலாகக் கையாண்டவர்களாக நுட்பமான அறிவுடையவர்கள் இருந்தார்கள் என்பதை குறள் நமக்கு தெரிவிக்கின்றது.
இவர்களை அறிவர், கணியர், வள்ளுவர் என்னும் பெயரில் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
பண்டை மக்களினத்தில் பலர் வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் சிலரே அதனைக் கூர்ந்து நோக்கினர். ஞாயிறையும் திங்களையும் விண்மீன்களையும் பற்றி நாம் பார்த்து பெற்ற பட்டறிவினால் மக்களுக்கு விளக்கினர். அவர்களின் கணிப்பு சரியாக இருந்ததினால் தமிழர்கள் அவர்களைக் கணியர்கள் என்றனர்.
செஞ்ஞாயிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்
வளிதிரி தரு திசையும்
வறிது நிலைஇய காயமு மென்றிவை
சென்றளந் தறிந்தோர் போல வென்றும
இனைத் தென்போரு முளரே

என்ற பாடலில் புறநானூற்றுப் (30) புலவர் உறையூர் முதுக்கண்ணனார் கூறுகிறார்.

சூரியன் எப்படிச் செல்கின்றது, சூரியனின் இயக்கம் எத்தகையது? அச்சூரியனை சுற்றியிழுக்கும் மண்டிலம் எத்தகையது? எதையும் தாங்காமல் தானாக நிற்கும் வானம் எவ்வாறானது? காற்றின் திசை என்ன? பூமிப்பந்தில் இயக்கம் எவ்வாறு அமைந்துள்ளது? இது போன்ற ஆய்வுகளில் ஈடுபட்டு விடை கண்ட அறிஞர்கள் உள்ளதை தமிழ்ச் சமூகத்தில் அடையாளம் காட்டுகிறார். அறிவியல் அற்புதங்களை ஆய்வு செய்த மனித குலத்தின் முன்னோடியாகத் தமிழர்கள் இருந்ததை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைத் தமிழப்;பாடல் செய்திகள் மூலம் அறியும் போது வானியலில் தமிழர்களின் பங்கு மகத்தானது என்பதை நிருபிக்கின்றது.

ஆதிகால மாந்தர்க்கு இயற்கையின் ஒவ்வொரு நிகழ்வும் புதிராகவே இருந்துள்ளது. பகலும்; இரவும்; வெய்யிலும் மழையும் குளிரும் வறட்சியும் இடியும்; மின்னலும் அவர்களை வாழ்வாதார போராட்டத்திற்குத் தள்ளியது. பருவகால மாற்றங்களின் ஊடே தங்களைத் தக்க வைத்துக் கொள்ள எடுத்த முயற்சிகளே பல புதிரான கேள்விகளுக்கு விடை அளித்தது.

அறிவார்ந்த சமூகத்தின் செயல்பாடுகள் இயற்கையை வெல்லும் சக்தியை மனித சமூகத்திற்கு வழங்கியது. அறிவார்ந்த அறிவியல் துறைகளில் தொன்மையானதும் இன்னும் புதுமையுடையதும் என்றும் வியப்பினை உள்ளடக்கியதும் வானியலாகும். இன்று பல தொலை நோக்கிகளையும் ஒளியியல் தொலைநோக்கிகளையும் கொண்டு ஆய்வதோடன்றி விண்வெளியில் ஆராய்ச்சி நிலையங்கள் அமைத்தும் காற்றிலேறி விண்ணையும் அறியும் முயற்சியிலும் மனிதகுலம் சாதனை செய்து வருகின்றது. ஆனால் இவற்றைத் தமிழ்ச்சான்றோர்கள் எவ்வித கருவிகளின் துணையுமின்றி தம் ஆற்றல் மிகு அறிவியல் பார்வையில் கணக்கிட்டுள்ளதை அறியும்போது நாம் எப்பொழுது தடம் மாறினோம்? எதற்காக மாறினோம்?; எவ்வாறு நடந்தது என்பதை ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.

கணியர் :
சென்ற காலமும் வருஉ மயமும்
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமு நிலனுந் தாமுழு துணருஞ்
சான்ற கொள்கைச் சாயா யாக்கை
ஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல் பொளிந் தன்ன ……………….

என்ற மதுரைக்காஞ்சி பாடல் நிகழ்காலத்தை வைத்து இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் விளக்க வல்லவர்களாக கணியர் இருந்;தனராம்;;;;;;;;;;;;;;;; வானியிலையுமஇ; நிலத்தியலையுயம் முழுதாகக் கற்றறிந்து உரைப்பதில் வல்லவர்களாம். நோன்புகளாற்றி உடலும் உள்ளமும் கெடாமல் பார்த்துக் கொண்டார்களாம். கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாம்இ அடக்கம் மிக்க சான்றோராமஇ; கூடி நோன்பிருக்கும் வகையில் இவர்களுக்கென்று கல்படுக்கைகள் அமைத்துத் தரப்பட்டன என்ற செய்தி கணியர்களைப் பற்றி விவரிக்கின்றது.

மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியினாற்றிய வறியன் தேயமும்
     (தொல்: பொருள்: 2:20:4-5)

இறந்த காலம்இ நிகழ்காலமஇ; எதிர்காலம் என்னும் முக்காலத்தையும் பற்றிய பிழைபடாச் செய்திகளைச் சொல்லி மக்களை நெறிப்படுத்தி வந்ததாக அறிவனின் தேயமும் என்ற பொருளில் தொல்காப்பிய வரிகள் சுட்டுகின்றன.

விண் இவ்வுலகம் விளைவிக்கும் வினைவெல்லாம்
கண்ணி உரைப்பான் கணி   (புறப்பொருள் வெண்பா)
வானியல் கணக்கும் உலகியல் கணக்கும் எண்ணி உரைப்பவன் கணிஎனப்பட்டான்.

பனியும் வெயிலுங் கூதிரும் யாவும்
துனியில் கொள்கையொடு நோன்மை எய்திய
தணிவுற்று அறிந்த கணிவன் முல்லை.
(பன்னிரு படலப்பாட்டு)

வானியலையும் நிலத்தியலையும் முழுதாகக் கற்றறிந்நு காலம் பார்த்துரைத்த கணியர்களை இப்பாடல்கள் சுட்டிக் காட்டுகின்றன.
பண்டைச் சமூக வாழ்வில் சிறு பொழுதுகளையுமஇ; பெரும் பொழுதுகளையும் அவ்வவற்றிலான கால ஒத்துக்களின் (சுhலவாஅள) 
வழியாக ஏற்படும் இயற்கையின் மாற்றங்களை மிகத் துல்லியமாகவுமஇ; முறையாகவும் அறிந்து அவற்றை மக்களுக்கு எடுத்து இயம்புவது மருத நில வாழ்வில் சமூகத்தின் பணி முதன்மையாகும்.

வேளாண் வாழ்க்கையில் வானியல் அறிவு முதன்மையானது இத்தகைய தேவையும் தொகுப்புமே நாள்காட்டி என்னும் ஓரு காலக் கருவியை ஈன்றது.

ஞாயிற்றினால் ஏற்படும் நிழல் சாய்வை வைத்து பொழுதையும் நாள்களையும் கணக்கிட்டு இரவில் விண்மீன்களை கணக்கிட்டனர்.
ஞாயிறு தோற்றமஇ; மறைவு தி;ங்களின் காருவா தொடங்கி வளர்ச்சி வெள்ளுவா யிலும் பின் வெள்ளுவா தொடங்கி காருவா வரையிலும் வானில் நிகழும் மாறுதல்களை கணித்தனர்.

ஒரு மழைக்காலத்திலிருந்து மற்றொரு மழைக்காலம்வரை நிகழும் பருவ மாற்றங்களை பெரும்பொழுதாக வகுத்தனர்.
ஓராண்டில் வரும் பருவங்களை குறிப்பிடும் தொல்காப்பியம், கார் காலத்தையே முதலில் வைக்கின்றது.

கார்காலம்    (ஆவணிஇ புரட்டாசி)
கூதிர்காலம்     (ஐப்பசிஇ கார்த்திகை)
முன்பனிக்காலம்   (மார்கழிஇ சுறவம்)
பின்பனிக்காலம்    (மாசிஇ பங்குனி)
இளவேனில்காலம்   (சித்திரைஇ வைகாசி)
முதுவேனில் காலம்  (ஆனிஇ ஆடி)

என்ற ஆறு பருவங்களை பெரும் பொழுதாகக் குறிப்பிடுகின்றது.
ஞாயிறு, திங்கள,; பூமியின் சுழற்சிகள் வானில் தோன்றும் எண்ணற்ற தோற்றங்களை கணித்த அறிவே பண்டைய வானியியல் அறிவாகும்.

வள்ளுவர் :
வானியலில் நிழல் சாய்வை வைத்தே பொழுதும் நாள்களும் கோள்களும் கண்டுபிடிக்கப்பட்டது. ஞாயிற்றின் பெயர்ச்சியை அளப்பதற்கென நட்டு வைத்த குச்சியைவிழுவன்குச்சிஎன்றனர். அவ்விழுவன்குச்சி மட்டமான தரையை தொடுகின்ற அடியை நடுவமாக வைத்து வள்ளுவக் கணியர்கள் நடுவ வட்டங்கள் சிலவற்றை வரைந்து கொண்டனர். அக்குச்சியை 12 விரற்கிடைகளாக (அங்குலமாக)வும் ஒவ்வொரு விரற்கிடையையும் அறுபது வியற்கலுகளாகவும் வகுத்துக் கொண்டனர் இதுதான் மைவரை நிழலில் நீளமாகிய சாயையை அளக்க உதவிய அளவுகோளாகும். அதே அளவுகளை இன்னொரு கோலின் மீதும் குறித்துக் கொண்டனர். ஒரு நடுவ வட்டத்தை விழுவன் குச்சியின் நிழலின் தலை வெட்டுகிற புள்ளிகளை மாறி மாறிக் குறித்துக் கொண்ட அக்கணியர்கள் அவற்றை வைத்து முழுத்தங்கள் என்னும் காலக் கூறுகளைக் கணக்கிட்டனர். அடுத்து அந்த ஒரு நடுவ வட்டங்களின் வில்களை இரு சமப் பாதிகளாக்கி மைவரையைக் (அநசனையைn) குறித்துக் கொண்டனர்.
பின்னர் நான்கு திசைகளும் நான்கு இடைத் திசைகளும் ஆக எட்டுத் திசைகளும் வரைந்து கொள்ளப்பட்டன. மைவரை (அநசனையைn) சாயையின் துணைக் கொண்டு வள்ளுவர்கள் நாள் கோள் பெயர்ச்சிகளை கணக்கிட்டனர்.

தமிழர்கள் ஒரு நாளை ஆறு சிறு பொழுதாக பிரிந்தனர்
வைகறை  (இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை)
காலை    (காலை 6 மணி முதல் 10 மணி வரை)
நண்பகல்  (பகல் 10 மணி முதல் 2 மணி வரை)
ஏற்பாடு    (2 மணிமுதல் 6 மணி வரை)
மாலை    (6 மணி முதல் 10 மணி வரை)
யாமம்    (10 மணி முதல் 2 மணி வரை)

விண்வெளி :
ஞாயிறு மண்டிலத்தளத்தை கோள் வட்டத்தளத்தையும் வெட்டுகின்ற கோணமாகக் குறிப்பிடும் வலனேர்பு என்ற வானியல் செய்தியோடு புலமைமிக்க பாடலாக கீழ்க்கண்ட பாடல் அமைந்துள்ளது.
நீன்ற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல
மலர்தலை மன்றத்துப் பலருடன் குழி இக்
கையினும் கலத்தினும் மெய்யுறத்; தீண்டிப்
பெருஞ்சினத் தாற் புறக் கொடா
அதிருஞ் செருவின்…….    (பட்டினப்பாலை – 67-72)

இப்பாடலில் ஒரு வீரன் நடுவில் இருக்கின்றான்;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; அவனைச் சுற்றி ஐந்தாறு பேர் அவனுடன் சண்டை போடுகிறார்கள். இதனைக் கண்ட பட்டினப்பாலை ஆசிரியர் ஓர் அறிவியல் செய்தியை உவமையாக கூறுகிறார். சூரியன் நடுவிலிருக்க அதனைக் சுற்றும் கோள்கள் போல நடுவிலிருக்கும் வீரனைப் பிறர் சூழ்ந்தனர்என்று. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வானியல் புலமை தமிழி;லக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங்காட்சி
ஒன்றக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரின் துன் அணுப் புரையச்
சிறியவாகப் தெரியின்
என்ற மாணிக்கவாசகர் திருவாசகத்திலே வானியியல் செய்திகளை தருகிறார்.

வானப்பெருவெளியை அண்டம் என்றுமஇ; அண்டமாகிய பேருலகின் பகுதிகள் உருண்டை வடிவாகவுமஇ; இவ்வுருண்டைகள் விரிந்து கொண்டு செல்வதை பிறக்கம்என்றுமஇ; வானிலே முத்துக்கள் போலத் தோன்றும் விண்மீன்கள் வௌ;வேறு உலகங்களாகும். அவை
எண்ணில்லாதவனவாய்ப் பரந்து தோன்றுதலின் அளப்பருந்தன்மைஎன்றும். அவை பல்வகை வடிவும் அளவும் தன்மையும் உடையவனாகலின் வளப்;;;;;;;;;;;;;;;;;;பெருங்காட்சிஎன்றும் சுட்டுகின்றார் அவற்றின் தூரம் முதலியன அளவடங்காமையின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தனஎன்றும்இ வீட்டினுள்ளே பலகணியின் வாயிலாகப் புகுகின்ற பகலவன் கதிர்களிலே நெருக்கமாகக் காணப்படும் அணுக்களை ஒப்பச் சிறியவென்று”  விவரிக்கின்றார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்இலக்கியம் பதிவு செய்த அறிவியல் செய்தியை உலகம் உண்மை என்று பின்னர் ஒப்புக் கொண்டது.

………………அடுபோர் அண்ணல்
இரவலர்க்கு ஈத்தயானையின் கரவு இன்று
வானம் மீன்பல பூப்பின் ஆனாது
ஒரு வழிக்கருவழி இன்றிப்
பெரு வெள்ளென்னின் பிழையாது மன்னே
      (புறம் 129)

உறையூர் ஏணிச்சேரி முட்மோசியார் என்ற பழந்தமிழ் புலவர் ஆய் அண்டிலன் இரப்போர்க்குக் கொடுத்த யானைகளின் எண்ணிக்கை பலவாகும். மேகம் மறைத்தலன்றி வானம் பல விண்மீனையும் பூக்குமாயின் கூட அந்த யானையின் தொகைக்கு நிகராகா. ஓரிடத்துக் கரிய இடம் இல்லாமல் விண்மீன்கள் பெருகி வெண்மையான ஒளி பரவி வானை வெண்மையாகச் செய்யுமாயினும் அவவிண்மீன்களின் எண்ணிக்கையும் அவன் பரிசளித்த யானைகளுக்கு நிகராகா
என்ற பொருளால் பரிசளித்த மன்னனைப் பாடும்போது இரவில் கரிய இடம் இல்லாது இருக்குமளவிற்கு விண்மீன் தொகை பெருகினால் எப்படியிருக்கும் என்ற அறிவியல் புதிரை உடன் உரைக்கின்றார்.
கணக்கற்ற ஒளிப்புள்ளிகளை வானில் கண்டு விண்மீன்கள் என்கிறோம். தொலை நோக்கியின் உதவியின்றி வெறும் கண்களால் நாம் மூவாயிரம் விண்மீன்கள் மட்டுமே ஓரே நேரத்தில் காண இயலும். தொடுவானத்தின் கீழ் உள்ள நம்மால் காண இயலாத அரைக்கோண வானில் மேலும் மூவாயிரம் விண்மீன்கள் புலனாகும். வெறும் கண்களால் ஆறாயிரம் விண்மீன்களைக்காண இயலும்.

நம் முன்னோர்கள் இவற்றை இரவிலுமஇ; இடப்பெயர்ச்சியின் போதும் கண்டனர். வானின் அழகில் அவ்விண்மீன்களை கற்பனைக் கோடுகளாய் புனைந்து விலங்குகளாகவும்இ பொருள்களாகவுமஇ; உருவங்களாகவும் கண்டனர்.

தமிழர்கள் இவ்வாறு 27 தொகுதிகளில் விண்மீன்களைப் பிரித்தனர்.

நாளும் கோளும் :
தாமே ஒளி விடக் கூடியதை நாள்மீன’; என்றுமஇ; ஞாயிறிமிடருந்து ஒளி பெற்று வீசுவதைகோள் மீன’; என்றும் வழங்கினர்.
காயம் மீன் எனக் கலந்து கான்  நிரை
மேய ------------(சீவக சிந்தாமணி 421)

ஆகாயமும்இ நட்சத்திரங் களும் போலக்
காட்டில் கலந்த பசுக்கள் மேயும ;போது
வானம் மீனின் அரும்பி மலர்ந்தது
கானம் பூத்த காரி என கேயான்
(சீவக சிந்தாமணி 726)
வானத்து மீன்கள் போல் அரும்பி மலர்ந்து கார்காலத்தில் காடுகள் பூத்தன என்பேனா? என்று விண்மீன் அழகை உவமை கூறினர்.

ஞாயிற்றின் ஒளியைக் கொள்ளுவதால் திங்கள; செவ்வாய,; அறிவன் (புதன்) வியாழன; வெள்ளி காரி(சனி) என்பனவற்றைக்  கோள்மீன்களாக உரைத்தனர்.

கோள்மீன் அன்ன பொலங்கலத்து
அளை இய
என்ற புறநானூற்றுப் பாடல் வரிகள் அரசன் புலவர்களுக்கு கோள்மீன்அன்ன ஒளி பொருந்திய பொன் கலங்களில் உணவிடுவதாக எடுத்துக் கூறுகின்றது.

முழு நிலவை உவாமதி என்றனர். முழு மதி அன்று ஞாயிறும் திங்களும் எதிர் எதிர் திசையில் இருக்கும் நிலவு தோன்றும் போது சூரியன் மறையும்.
உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து
திருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
புண்கண் மாலை மலை மறந்தாங்க (புறம் : 65-68)

என்ற வானியியல் செய்தியை பண்டைத் தமிழிலக்கியம் அழகாக எடுத்துக் கூறுகின்றது. சந்திரன் பதினைந்து நாட்களில் முழுமையான ஒளி பெறுவதை
மாக விசும்பின் வெண்டிங்கள்
;தான் முறை முற்ற”  (புறம் - 400:1-2)
என கோவூர்கிழார் பாடியுள்ளார். திங்களின் (சந்திரனின்) ஒளி வளர்வது வளர்பிறை என்றும்

எண்ணாள் திங்கள் அனைய
(புறம் 118-2)

ஒளி தேய்த்துத் தேய்பிறை என்றும்
எண்ணாள் பக்கத்து பசுவெண் 
 என (குறுந்தொகை) உவமித்துள்ளது.
அறையும் பொறையும் மணந்த தலைய
எண்ணாட் டிங்க ளனைய கொடுங்காரத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ
      (புறம் 118: 1-3)
என்ற கபிலர் பாடலில் எட்டாம் நாள் பிறைச்சந்திரன் உவமை கூறப்படுகின்றது.
ஒரு நாள்மீனிலிருந்து மற்றொரு நாள்மீனுக்கு திங்கள் பெயரும் காலத்தைக் கணியர்கள் நாள் என்றனர்.
மதிசேர் நாண்மீன் போல நவின்ற
சிறுபொ னன்கலஞ் சுற்ற  (புறம் - 180:8-9)
ஒரு நாள் மீனினூடே பெயர்வதற்குத் திங்கள் எடுத்துக்கொண்ட காலத்தையே நாள்என்றனர் என்பதைத் தமிழலக்கியம் பதிவு செய்துள்ளது.
விண்மீனுக்கு உடு என்று பெயர் உண்டு. தொடக்கத்தில் திங்கள் உடுமாதம் என கணியர்கள் வகுத்து ஆண்டைக் கணக்கிட்டார்கள். இதில் நாள்மீன் ஊடே திங்களின் வளர்பிறைஇ தேய்பிறை பயணத்தையும் கணக்கிட்டனர்.
தமிழர்கள் கண்ட நாள் மீன்கள் இருபத்தேழு ஆகும்.
1. புரவி (அசுவினி): தொல் தமிழரின் வாழ்வில் மனிதனைச் சுமந்த மான்இ எருமை பயன்பாட்டு வரிசையில் வந்த குதிரையைக் குறிப்பதாகும்.
2. சகடு (உரோகினி): உருள் என்ற பொருளில் குறிப்பிடப்படுகின்றது.
3. மான்றலை (மிருகசீரிடம்): நிறத்தோடு பளிச்சென வெளிப்படும் மானின் அல்லது விலங்கின் தலை.
4. மூதிரை (திருவாதிரை): மூத்தவன்இ பெரியோன் என்ற பொருளில் குறிப்பிடும் மீன.;
5. கழை (புணர்பூசம்): மூங்கிலையும்இ ஆண்குறியையும் குறிக்கும் விண்மீன.;
6. காற்குளம் (கொடிலு ஃ பூசம்): குளம் என்பது கதுப்பு என்ற பொருள்படும.; எடுப்பான தோற்றத்தைக் குறிக்கும் பூச்சு எனவும் பொருள்படும்.
7. கட்செவி (ஆயில்யம்): நீண்டிருப்பது என்ற பொருளாகும்.
8. கொடுநுகம் (மகம்): நீண்ட கோட்டைப் போன்ற தோற்றமஇ; மறைப்பு, மறைவு என குறிக்கும்.
9. கணை (பூரம்): நிறைவுஇ திரட்சிஇ பூரித்தல் குறிப்பதாகும்
10. உத்திரம்: மேல்நோக்கி எழுதல்.
11. ஐவிரல் (அத்தம்): ஐந்து மீன் எனப் பொருள்படும்
12. அறுவை (சித்திரை): அறுக்கப்பட்ட ஆடை, சிறிய ஆடை சிற்றாடை எனப் பொருள்படும்.
13. விளக்கு (சோதி): உயர்ந்த வைக்கப்பட்டுள்ள தீயை குறிக்கும் சுவர் என்றால் வானம் வானத்தில் உயர்ந்துள்ள விண்மீன் எனப்படும்.
14. முறம் (விசாகம்): முறத்தை பயன்படுத்தும் போது வெளிப்படும் காற்றும்இ கோடையில் வீசும் மேலைக்காற்றும் சுட்டும் விண்மீன்.
15. முடப்பனை (அனுசம்): பனைமரம் போன்ற தோற்றம்.
16. துளங்கொளி (கேட்டை): தேளின் உடலாகவும் கேட்டை நான்கும் ஈட்டியைப் போலவும் கூறப்படும்.
17. குருகு (மூலம்): முதன்மையானது என்ற பொருள்படும.;
18. உடைகுளம் (முற்குளம் ஃ பூராடம்): தொன்மையான நீரிடத்தை தொடர்புபடுத்தும் விண்மீன்.
19. கடைகுளம் (உத்திராடம்): தொன்மையான நீரிடத்தின் பிற்பகுதியை குறிப்பதாகும்.
20. முக்கோல் (திருவோணம்): மூன்று ஒளியுள்ள மீன்கள் கலுழுன் வடிவத்துடன் இணைக்கப்பட்டது. விண்மீனுக்கு அருகில் பால்வெளி ஆறுபோல் காட்சியுறுவதால் ஓணம் எனப்பட்டது.
21. காக்கை ( அவிட்டம்): பறவையோடு தொடர்புபடுத்தப்படும் விண்மீன் கூட்டம்.
22. செக்கு (சதயம்): எண்ணெய்ப்பூச்சு எண்ணெய்க்கு உருவகமாக செக்கு எனும் விண்மீன.;
23. நாழி (புரட்டாதி): முன் இரவில் (நாழியில்) தோன்றும் மீன்.
24. முரசு (உத்திரட்டாதி): பின் நாழிகை மீன் நாழிகையை அறிவிக்கும் முரசோடு தொடர்புபடுத்தப்படுகின்றது.
25. தோணி (ரேவதி): தோணியின் வடசொல் இரேவதி. தோணிpப்பெண்ணாக உருவகம் கூறப்படுகின்றது.
26. ஆரல் (கார்த்திகை): வட்டமான மாலை போன்ற விண்மீன் கூட்டம், பெண்களாகவும்இ மழைக்குரிய அறுமீனாகவும் கூறப்படுகின்றது.
27. அடுப்புக்கொண்டை (பரணி): உயர்ந்த இடத்தில் உள்ள மீன் என்ற பொருளில் கூறப்படுகின்றது.

விண்மீன்களின் தோற்றங்களை அவற்றைத் தொடர்பு படுத்தும் சொற்கள் தமிழில் வேர்ச் சொற்களை கொண்டிருப்பது தமிழர்கள் வானியியலை முழுமையாக அறிந்திருந்தனர் என்பதனைக் காட்டுகின்றது.
வடமொழியில் வழங்கப்படும் பெயர்கள் தமிழ்ச்சொற்களின் வேர்ச்சொல்லால் தொடர்பு கொண்டிருப்பதையும் உணர முடிகின்றது.
ஞாயிற்றையுமஇ; திங்களையும் தவிர்த்த பிற ஐந்து கிழமைகளின் பெயர்களைக் கோள்களின் பெயர்களாகவே அமைத்த சிறப்பு தமிழர்களுக்குரியது. ஞாயிறும்இ திங்களும்இ கோள்களுமல்ல இருபத்தி ஏழு நாள் மீனுக்குள் அடங்குவனல்ல என்னும் தெளிந்த அறிவியல் அறிவு கணியர்கள்இ அறிவர்கள் என அழைக்கப்பட்ட வள்ளுவர்களிடம் அன்றே இருந்துள்ளது.

நாள்கோ டிங்கள் ஞாயிறு கனையழல்
ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை
         பதிற்றுப்;பத்து (14:3-4)
என்பன குமட்டூர் கண்ணனார் பாடிய பாடல் வரிகள்.
(இருபத்தேழு) நாள்மீன்களும் (ஐந்து) கோள் மீன்களும் ஞாயிறும் கணையழலும்இ ஆகிய யாவும் ஒமுங்குறச் சேர்ந்தால் வரும் ஒளியை உடையவன் என இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பற்றிய இப்பாடலில் திங்களையும்இ ஞாயிற்றையும் கோள்களாகக் கொள்ளாமல் நாள்மீன்களிலருந்து அவற்றை வேறுபடுத்திக் காட்டுவதை அறிய முடிகின்றது.

இத்தமிழ் வானியல்மரபே உலகெங்குமுள்ள பெருபான்மையான பண்பாடுகளில் பரவி நிலைத்து விட்டது.

ஞாயிறு  திங்கள்
வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உலர் மலையத்து உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய
    (சிலப்பதிகாரம் - காடு காண் காதை)
  என்னும் அடிகளில் இளங்கோவடிகள் சூரியன்இ சந்திரன் இருமருங்கிலும் எதிர் எதிரே இருப்பன எனக் காட்டுகின்றார்.
ஞாயிற்று அன்ன வெந்நிறல் ஆண்மையும்
திங்கள் அன்னநின் பெருஞ்சாயலும்
என்ற (புறம்-59) பாடலில்
ஞாயிற்றின் வெம்மையும்இ திங்களின் குளிர்ச்சியும் உவமையாக்கப்படுகின்றது.
அறுவாய் நிறைந்த அவிர்மதி; போல
மறுஉண்டோ மாதர் முகத்து.
   என்ற (குறளில் 1117)
திருவள்ளுவர் நிலவில் காணும் குழிகளை மாதர் முகத்தில் உள்ள மருக்கள் என குறிப்பிடுவது வியப்பாக உள்ளது. பூமியிலிருந்து நாம் காணும் அரைக்கோளத்தில் மட்டும் பத்தாயிரம் குழிகளை தொலைநோக்கி மூலம் சந்திரனில் காணலாம் என்பது இன்றைய அறிவியல் செய்தி.

செவ்வாய்
செந்நிறத்ததெனப் பொருள்படும் செவ்வாய் கோளைக் குறி;த்தது செவ்வாய்க்கிழமை.
முந்நீர் நரப்பண் திமிற்சுடர் போலச்
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்

 என்ற மருத்துவன் தாமோதரனார் என்ற பண்டைத் தமிழ்ப்புலவரின் பாடல்வரிகள் செவ்வாய் என்ற கோள் சிவந்த நிறமுடையது. கடல் நடுவே தோன்றுகின்ற திமிலன்கண் இடப்பட்ட விளக்கு போல விளங்கும் என்று கூறுகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய் மண்ணில் உள்ள இரும்பு ஆக்ஸைடு என்கின்ற இரும்புத்துருதான் செந்நிற ஒளியைச் செவ்வாய் கோளின் ஒளி என்று அறிவியல் உண்மை எடுத்துக் கூறுகின்றது.

புதன்
அறிவன் கோளைக் குறிக்க
அறிவன் (புதன்) கிழமையும்இ
 சூரியனுக்கு மிக அருகே உள்ள கோள் புதன் என்கி;ன்ற அறிவன் ஆகும். பரிபாடல் ஐந்து கோள்களைச் சுட்டும் போது முதலாவதாக புத்திஎன முதலாவதாக புதன் கோளைச் சுட்டுகின்றது.

வியாழன்
ஞாயிறு குடும்பத்தில் பெரியது
என்பதால் வியாழன் கோளின்
பெயராகிய வியாழக் கிழமையும்இ
மண்டலம் நிறைந்த மாசில் மதிப்புடை
வியாழன் போன்று ஓர் குண்டலம் இலள்
 என்று சீவக சிந்தாமணியில் சந்திரனும் வியாழனும் அருகருகே வரும் காட்சியை தத்தையின் முகமும் குண்டலமும் என உவமையாகக் கூறுகிறார் திருத்தக்கத்தேவர்.

 வியல்+ஆழம் என்றும் வியாழன் என்பதைப் பிரிக்கலாம். (வியல் - அகன்றது. ஆழம் - அறிவதற்கு அரியது.) கோள்களிலே மிகப்பெரியது என்ற பொருளில் கணியர்கள் வியாழனைக் கண்டனர்.

வெள்ளி
வெள்ளியைப் போல ஓளிரும் கோள்
என்பதால் வெள்ளிக்கிழமை என்றுப் பெயர்.
 வெள்ளிக்கோளின் வளி மண்டலத்தின் மேற்கு பகுதியில் காணப்படும் கந்தக அமில மேகக்கூட்டங்கள் அதிக அளவில் சூரிய ஒளியை பிரதிபலிப்பதாலேயே இந்தக் கோள் ஒளியுடன் திகழ்கின்றது. ஆறுமாதங்களுக்கு விடியற்காலையிலும் ஆறுமாதங்களுக்கு மாலையிலும் இது தென்படும்.

இதனை
வெள்ளி தோன்ற புள்ளுக்குரல் இயம்ப
   என்கிறது புறநானூறு  புறம்(385:1)
வெள்ளி விளக்கம் நம்
இருள் கடியக்
 எனவும் ஒளிரும் வெள்ளிக்கோளை பழந்தமிழப்; பாடல்கள் குறிப்பிடுகின்றன.
 பூமியை விட சிறிதளவு மட்டுமே சிறிய கோள் வெள்ளி அதனால் அதனை பூமியின் சகோதரி என்பர். தமிழ்ப்பெண்கள் மத்தியில் வெள்ளி தாய்த்தெய்வ வழிபாட்டுக்குரிய நாளாக உள்ளது உணரத்தக்கது.

காரி (சனி)
கரிய நிறமுள்ள கோள் என்பதால் காரி (சனிகிழமை) எனப்பட்டது.
 
 சனிக்கோளுக்கு வளையம் உள்ளதை 16ஆம் நூற்றாண்டில் தொலைநோக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டபோதுதான் அறியப்பட்டது.
; ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன் தமிழில் சனிக்கோள் புகைந்து வளையம் போல் அமைய புகை சூழ்ந்துள்ளது எனச்செய்தி பதிவாகியுள்ளது.
கரியவன் புகையினும்இ புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்இ
      சிலப்பதிகாரம் - நாடுகாண்காதை (105)
மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்

     (புறநானூறு 117)
பாடல்களிலும் காரி என்றும்இ கரியவன் என்றும்மைம்மீன் எனவும் பரிபாடலில்;; குறிக்கப்படுகின்றது.
 என இவ்வாறு ஏழு நாட்களை வகுத்தனர் பழந்தமிழர்.
 பண்டைக்காலம் முதல் சமய வழியிலான சடங்குகளுக்குத் திங்களின் பெயர்ச்சியை தழுவிய உவா (திங்கள்) நாட்காட்டி மக்களிடம் எளிதாகப் பரவியது. முழுநிலவு நாளின் மீன்கள்; மாதப்பெயர்களாக அறியப்பட்டது. சமயம் சார்ந்த விழாக்கள் முழுநிலவு நாளின் பொருந்தும் விண்மீன்களோடு தொன்மக் கதைகள் இணைக்கப்பட்டன. பன்னிரெண்டு உவா மாதங்கள் ஓராண்டு கணக்கிற்குத் துல்லியமாய் பொருந்தவில்லை. பருவம் பார்த்து விதை விதைக்கவும்இ பயிர் அறுவடைக்கும் வேண்டியிருந்த வேளாண்தொழிலில் பருவகாலங்கள் ஆண்டுக்கு ஆண்டு வேறுபட்டன.

சமய ஆதிக்கத்தில் நிலைநின்ற திங்கள் (உவா) மாதங்களை தமிழ்க்கணியர்கள் சரிபார்த்து ஞாயிற்றை வைத்துக் கணக்கிட்டுச் சரி செய்தனர்.

தமிழ்ஆண்டுக் கணக்கு
 ஞாயிறு மண்டிலத்தை தமிழர்கள் பன்னிரு ஓரை(ராசி)களாக  வகுத்தனர்.
ஒரு புதிய ஓரைக்குள் (வீட்டிற்குள்) காலையாயினும்இ  நண்பகலாயினும்இ  இரவாயினும் ஞாயிறு புகுந்தவுடன் தமிழரின் மாதம் பிறந்து விடு;ம் கணக்கினை உருவாக்கினர்.
 ஞாலத்தின் நடுவரையுடன் (நுஙரயவழச) ஒரு குறிப்பிட்ட மைவரை (அநசனையைn) சேர்கின்ற இடத்தை வைத்தே ஞாயிறு எழும் வேளையைத்; தமிழர்கள் கணக்கிட்டுள்ளனர்.
திங்களுக்குப்பதில் ஞாயிறு முன்வைத்த இம்மாற்றத்தை
  ‘திங்களும் நாளும் முந்து கிளத்தன்ன
என இகர வீற்று ஐகார வீற்றுப் புணர்ச்சிப் பற்றி விளக்குகையி;ல் தொல்காப்பியம் திங்கள் உடுக் கணக்கு முன்னாள் விளங்கிய நாட்காட்டி எனும் பொருள்பட குறிப்பதால் உணர முடிகின்றது.
சமய ஆதிக்கத்தில் கடைப்பிடித்த உடுஆண்டு குழப்பங்கள் பற்றி சதபதபிராமணம் தரும் குறிப்பில்
 ‘தெய்வங்கள் நடத்தி வந்த வேள்வியில் தங்களுக்கு பங்குதர வேண்டுமெனப் பருவங்கள் தேவர்களை அணுகி வேண்டின. தேவர்கள் அதற்கு இணங்க மறுத்து விட்டனர். இதனால் அப்பருவங்கள் அசுரர்களை அணுகி உதவிபெற்றன. அசுரர்கள் நல்ல வளம் பெற்றனர். விதைக்கும் பருவமென தேவர்கள் கருதி வந்த காலத்தில் அசுரர்கள்பயிரை அறுத்துக் கொண்டிருந்தனர்என ஓவென அக்குறிப்பில் புலம்பல் தெரிவிக்கின்றது.
ஆரியர்களால் அசுரர்என இழிந்துரைக்கப்பட்ட தமிழர்களின் அறிவர்களைப்பற்றிய குறிப்பு இருக்கு வேதத்தில் அசுரனின் மாயையாலே ஞாயிறு வெளிப்படுவதை அறிவுரையோர் தங்களின் நெஞ்சில் பொதிந்திருக்கும் அடி மனதில் அறிந்துள்ளனர். அம் முனிவர்களோ ஞாயிறு மண்டிலத்தை நோக்குகின்றனர் (ஞாயிற்றை வழிபடுமாறு) விதித்தவர்கள். அஞ்ஞாயிற்றின் கதிர் மண்டலத்தை நாடுகின்றனர் என்ற கூற்று தொல்வானியியல் அறிவு தமிழர்களுக்கு இருந்ததை சான்றாக உரைப்பதை உணர முடிகின்றது.
ஞாயிறு, திங்கள் போன்றவைகளில் ஏற்படும் ஒவ்வொரு மாறுபாடும் திதி எனப்பட்டது. ஞாயிற்றின் தென்திசை பயணம் திதி எனவுமஇ; வடதிசைபயணம் அதிதி எனவும் குறிப்பிடப்படுகின்றது. திதியிலிருந்து அதிதி பிறந்ததாகவும் அதிதியிலிருந்து ஆதித்யர்கள் பிறந்தனர் என்றன தொன்மக் கதைகள்.
பருவகால மாற்றங்களின் அறிகுறியான ஞாயிறுஇ திங்கள் மாற்றங்களை கணித்த செய்திகள் ஞாயி;று ஆண்டுத் தொடக்கத்தை கணக்கிட்ட வானவியல் அறிவுச் செய்திகளாகும். திதி அதிதி ஆதித்ய என்ற சொற்களின் ஒற்றுமை ஞாயிறு தென்திசையிலிருந்து வடக்கு நோக்கி மீளும் நாள் என்பதையும் பன்னிரு ஆதித்தியர்கள் என குறிப்பிடுவதும்  நன்கு புலனாகின்றது.
ஓரை என்ற தமிழ்ச்;;சொல; காலத்தைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ளது. ஒர்-ஓர்தல் ஆராய்தல; அளவெடுத்தல் உன்னிப்பார்த்தல் காலங்கணித்தல் என்றவாறு பொருள் விரியும். ஓர் என்ற வேர்ச்சொல்லினின்றே ஓரை என்ற சொல் பிறந்தது.
மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை - தொல்காப்பியம்

ஓரை என்ற சொல; தொல்காப்பிய காலத்திலும் அதற்கு முன்பும் பயன்பாட்டில் இருந்ததையே மேற்கண்ட வரிகள் எடுத்துக்காட்டுகின்றன. பன்னிரு ஓரைகள் என்பதை (இராசிகள்) அப்பன்னிரு இடங்களையும் ஞாயிறு கடக்க எடுத்துக் கொள்ளும் காலம் என்று பொருள் கொள்ள வேண்டும். பன்னிரு ஓரைகளின் பெயர்களையும் உன்னிப்பார்க்கும் போது இந்த உண்மைகள் வெளிப்படுகின்றன.

விண்மீன்கள் யாவற்றிற்கும் நமது முன்னோர்கள் பெயர் வைத்திருந்தனர். எண்ணவியலாத அளவில் தெரியும் மீன்களுக்குப் பெயர் வைத்தது அம்மீன் பற்றிய செய்தியை வரும் தலைமுறையினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே. கிண்ணம் கவிழ்த்தது போன்ற இரவு வானில் தெரியும் மீன்களை  12 பகுதிகளாக வகுத்தனர். இப்பன்னிரு பகுதிகளும் தலைக்கு 30 பாகைகள் என்ற அளவில் 360 பாகைகளைக் கொண்டவைகள் ஆகும். ஓவ்வொரு பகுதிக்கும் ஓரை என்றால் ஓவ்வொரு ஓரையிலும் சில மீன்களை உள்ளடக்கி அவை அமைந்துள்ள இடத்தின் இடைவெளிகளைக்  கணக்கிட்டு அம்மீன்களை ஒவ்வொரு ஒரையிலும் இணைத்தனர். இவ்வாறு பிரிக்கப்பட்ட ஓரைகளுக்குள் தெரியும் அனைத்து மீன்களையும் அவ்வோரை மீனாகவே கருதினர். இவ்வோரைகள் ஒவ்வொன்றும் ஞாயிறு கடந்து செல்லும் பாதைகளாகும். ஓவ்வொரு ஓரையையும் ஞாயிறு கடக்க ஒரு திங்களை எடுத்துக் கொள்கிறது. 12 ஓரைகளையும் ஓராண்டில் ஞாயிறு கடந்து செல்கிறது.
ஓரைகளும் மீன்களும்:
1. மேழம் (மேஷம்): ஆட்டின் கொம்பைப் போன்ற ஓரை. மேழ ஒரையில் தோன்றும் புரவி(அசுவினி) அடுப்புக்கொண்டை (பரணி) ஆகியவை முழுதும,; கார்த்தி (கார்த்திகை) சிறு பகுதியும் கொண்டது.
2. விடை (ரிஷபம்) : காளை உருவத்தை கொண்ட ஓரை. கார்த்தி முக்காற்பங்கும் சகடு (உரோகினி) மான்றலை (மிருகசீரிடம்) பாதியும் இடம் பெற்றது.
3. ஆடவை (திருவாதிரை) : அழகுமிக்க செந்நிற மீன்களை கொண்ட இவ்வோரை ஒன்றோடு ஒன்று சேரும் இரட்டைவிளக்கமாக கூறப்படுகின்றது. மான்றலையில் பாதியும் திருவாதிரை முழுதுமஇ; கழை (புணர்பூசம்) முக்காற்பங்கும் அடங்கியது.
4. கடகம்: மழை வருவதை முன்கூட்டி அறியும் நண்டுடன் இவ்வோரை பருவகால கணிப்பாக கூறப்படுகின்றது. கழை காற்பங்குமஇ; காற்குளமும் (பூசம்) கட்செவியும் (ஆயில்யம்) முழுதும் உள்ளது.             
5. மடங்கல்;: (சிம்மம்) கொல்லுந்தன்மையோடு உணர்த்தும் இவ்வோரை அரிமாவோடுமஇ; யமனோடும் தொடர்புபடுத்தப்படுகின்றது. கொடுநுகம் (மகம்)இ கணை (பூரம்) முழுதும் உத்திரம் காற்பங்கும் அமைந்தது.
6. கன்னி : அச்சம் தரும் பெண்ணாக கருதும் ஓரை. உத்திரம் முக்காற் பங்கும்இ ஐவிரல் (அத்தம்) முழுதும்இ அறுவை (சித்திரை) பாதியும் இடம் பெற்றது.
7. துலை (துலாம்): எடைபோடும் பண்டைய கருவியான தூக்குவோடுதொடர்புபடுத்தப்படும் ஒரை. அறுவையில் பாதியுமஇ; விளக்கு (சுவாதி) முழுமையுமஇ; முறம் (விசாகம்) கால் பங்கும் கொண்டது.
8. நளி: (விருச்சிகம்) தேளை போன்றதொரு உருவம் கொண்ட ஓரை. முறம் முக்காற் பங்கும் முடப்பனை (அனுடம்)யும் துளங்கொளி (கேட்டை) முழுமையும் உள்ளது.
9. சிலை: (தனுசு) வேட்டைக்குரிய வில் செய்யக்கூடிய சில மரத்தோடு தொடர்புடைய ஒரை. மூலம் அல்லது குருகு உடைகுளம் (பூராடம்) முழுமையுமஇ; கடைகுளம் (உத்தராடம்) காற்பங்கும் கொண்டது.
10. சுறவம்: (மகரம்) ஆடும் மீனும் இணைத்து வளைவாக உருவப்படுத்தப்படும் ஓரை. கடைகுளம் முற்காற்பங்கும் திருவோணம் (சிராவணம்) முழுதும் காக்கை (அவிட்டம்) காற்பங்கும் அமைந்தது.
11. கும்பம்: குடம் என்ற வடிவத்தோடு தொடர்புடைய ஓரைக் காக்கை முக்காற்பங்கும் செக்கு (சதயம்) முழுப்பங்கும் நாழி (பூராட்டாதி) முக்காற்பங்கும் உள்ளது.
12. மீனம்: மீன் உருவத்தோடு ஒளிரும் ஓரை. நாழி காற்பங்கும் முரசு (உத்திரட்டாதி) தோணி (இரேவதி) முழுதும் அடங்கியது.
மேற்கண்ட பன்னிரு ஓரையும் 30 பாகை அளவில் 360 பாகைகளாக வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் 27 விண்மீன்களும் வௌ;வேறு பாகை இடைவெளிகளில் உள்ளன.
தமிழில் பன்னிரு ஓரைகளின் பெயரில் சொல்லப்படும் மாதப் பெயர்களாக மற்ற நாடுகளின் மாதப்பெயர்களோடு பொருந்தி உள்ளது கவனிக்கத்தக்கதாகும்.

வானிவியல் அறிவு பெற்ற தமிழர்கள் உருவாக ஒரு விளைநிலமாக அவர்களின் வாழ்க்கையின் நடப்புகள் இருந்தன. இயற்கையை எதிர்த்தும் அதனோடு ஒன்றியும்இ பிரிந்தும்இ வென்றும் வாழத்தலைப்பட்டபோது கற்ற அறிவே வானியல் அறிவு ஆதலால்தான் வானியலில் உள்ள தமிழ் கணியர்கள் உருவாக்கிய சொற்கள் தமிழ் வேர்ச் சொற்களாக
 காணப்படுகின்றன.

புத்தாண்டுப் பிறப்பு
குறிஞ்சி வாழ்வுக்குரிய வேட்டுவத் தொழிலும் முல்லை வாழ்வுக்குரிய ஆயர் தொழிலும் மருத நிலத்திற்குரிய வேளாண் தொழிலும்  நெய்தல் வாழ்வோடு மயங்கிய கடல் வணிகமும் அவற்றிற்கு வேண்டிய தொழில்நுட்ப வளர்ச்சிகளும் அன்றையச் சூழ்நிலைகளில் அவ்வறிவை ஊட்டின.

வானிலை பருவங்கள் நாள்கோள் நீர்நிலைகள் முதலான இயற்கையின் நிகழ்வுகளைப் பற்றிய அறிவு உழவு வாழ்வியலுக்கு இன்றியமையாததாகியது. மேம்பட்ட ஆழமும் அகலமும் கொண்ட இயற்கை அறிவியலே வேளாண்மை வாழ்வின் அறிவுத் தேவையாக இருந்தது.
குறிஞ்சி, முல்லை ஆகிய வாழ்வியல்களைவிடச் செப்பமாகவும் செறிவாகவும் நிலைத்துவிட்ட ஒரு குடியமைப்பாகவும் மருத வாழ்வியல் இருந்தது. வேளாண் வாழ்க்கைக்குள் வளர்த்திட்ட உள்நாட்டு வணிகமும்வெளிநாடுகளுடலான கடல் வணிகமும் பெருகியபோது கணியர்களின் சிறப்பு மேலோங்கியது.
தெளியத் தோன்றும் இயற்கைய என்ப

   (தொல்: சொல்: 4: 1: 2)
என்ற தொல்காப்பிய வரியில் இயற்கை எனும் கருத்து இயல்பு என்ற உள்ளீட்டைக் கொண்டிருப்பதும் எல்லா சொல்லும் பொருள் குறித் தனவே”. என்ற தொல்காப்பியவரி சொல்லாகிய கருத்தாக்கம் யாதும் பொருளாகிய புறமெய்ம்மையைச் சுட்டுவனவென்றும் பொருள்தருவதாகும். பொருளை முதன்நிலையிலும் வைத்துப் பெயராகிய கருத்தை வழி நிலையில் வைக்கும். அன்றைய சமூக வாழ்வின் யதார்த்தத்தில் தோன்றியதின் விளக்கம் ஆகும்.,

இயற்கையின் உடமையின் முறைமையின் கிழமையின்
சேயற்கையின் முதுமையின் வினையிற் னென்றா
என்ற தொல்காப்பிய நூற்பா அன்றைய கணியர்களின் மெய்யியலை பொருளின் அகஇ புறப் பெயர்ச்சிகளைப்பற்றிய தமிழ் அணுவியத்தின் அறிவியல் நிலைப்பாட்டை விளக்குகின்றது.
காலத்தை வென்ற தமிழ் அறிவர்களின் வள்ளுவக்கணியம் வளர்ச்சி உலகிற்கு வழங்கிய கொடையாக உணரப்படுகின்றது.
தனித்துவம்மிக்க தமிழர்களின் வானியியல் அறிவைச் சுட்டும் தமிழ்க்கணிய நூல்களை அறிய முடியாமல் அழிக்கப்பட்டிருந்தாலும் அதன் அறிவுக் களஞ்சியம் தமிழிலக்கியங்களில் ஒளி வீசும் தாரகையாய் விரவி காட்டுகின்றன.

புறநானூற்றின் முதற் பாடலே நிலவின் இளம்பிறை என வான்பொருளின் பெயரால் துவங்குகிறது. முடிவாக வரும் நானூறாம் பாடல்
மாக விசும்பின் வெண்டிங்கள்
மூவைந்தான் முறை முற்ற
     (புறம் 118-2)
என வானத்தையும் நிலவின் கலையையும் (மாற்றத்தையும்) குறிப்பதாக உள்ளது.

சொல்லோவியமான சிலப்பதிகாரம்

ஞாயிறு போற்றதும் ஞாயிறு போற்றதும் 
திங்களை போற்றதும் திங்களை போற்றதும்
 என குறிப்பிடுவது பண்டைய திங்கள் உடுநாட்காட்டிக்குப் பதில் ஞாயிறு  நாட்காட்டியை முன்னிருத்தி கூறும் செய்தியாகும்.

பூமியின் சுழற்சியால் சூரியன் வடக்கும்இ தெற்குமாக நகர்வது போன்றதொரு தோற்றத்தை வள்ளுவக்கணியர்கள்
ஞாயிற்றின் வடசெலவு (பயணம்) (உத்திராயணம்)
ஞாயிற்றின் தென்செலவு (பயணம்) (தட்சிணாயணம)என்று கணித்தனர்.
ஞாயிற்றின் வடதிசைப் பயணத்தில் ஞாயிறு சுறவத்தில் தொடங்கிக் கும்பம் என்றும் அடுத்து மீனம் என்றும் பெயரும். மேழ விழுவைக் கடக்கையில் பகலும் இரவும் சமமாக இருக்கும். அதற்கடுக்து பகல் நீளும் இரவு குறையும். ஆடவையை ஞாயிறு எட்டுகையில் பகலின் நீட்டம் ஒரு வரம்பை எய்தும். அடுத்து கடகத்தை எட்டியவுடன் ஞாயிறு கீழ்நோக்கி இறங்கித் தென் (திசைப்பயணம்) செலவைத் தொடங்குவதாக சித்தரிப்பர்.
விதைக்கும் பருவமெனத் தேவர்கள் கருதி வந்த காலத்தில் அசுரர்கள் பயிரை அறுத்துக் கொண்டிருந்தனர். என சதபதபிராமணம் புலம்பலுக்கும் தை (சுறவம்) முதல் நாள் தமிழர் புத்தாண்டு எனபதை ஏற்க மறுக்கும் கும்பலின் புலம்பலுக்கும் தொடர்பு அறிய முடிகின்றது.
தமிழர்களின் புத்தாண்டை அறுவடைத் திருநாள் என பொங்கல் திருநாளாக கணித்த தமிழ்க் கணியத்தின் தொன்மமும் நமக்கு புலனாகின்றது.

ஆடு என்பது வானியியல் அறிவையும் மீன் என்பது தமிழர்களையும் குறிக்கும் சான்றாக சுறவம் ஓரை, ஆடும் மீனும் இணைந்த வளைந்த உருவமாக சித்தரிக்கப்படுகின்றது தொல்தமிழரின் வானியல் தொன்மத்தினை இது சுட்டிக்காட்டுகின்றது.

ஞாயிற்றின் நகர்வுகளைக் கணக்கிட்ட தமிழ்க்கணியர்கள் குறிப்பிட்ட நாள்களில் சூரிய கதிர்கள் கோவில்களின் கருவறைக்குள் விழுமாறு கட்டடக் கலைக்கு வானியியல் அறிவை ஊட்டினார்கள்.

வள்ளுவக் கணியம்
இரவில் திசை காட்டியாகவும் காலம் காட்டியாகவும் வளர்ந்த வள்ளுவக் கணியம் வாழ்வியல் வழிகாட்டியாக திருக்குறளை அளித்துள்ளது பெருமை மி;க்கதாகும்.
நிலநடுக்கம்இ மழைஇ வறட்சிஇ புயல்இ வெள்ளம் முதலான இயற்கை நிகழ்வுகளுக்கு முன்னால் பறவைகளும்இ விலங்குகளும்இ ஊர்வனவும்இ எறும்புகளும் பிறவும் தம் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வதைப் போன்ற குறிப்புகளை கொண்டு என்ன வரப்போகின்றது என்பதை முன்கூட்டியே பகர்வதை குறி (நிமித்தம்) என்னும் பண்டைய அறிவியல் சமூகத்தில் கணியர்களுக்கு உயர்நிலையை அளித்தது.

ஆழல் மருங்கில் வெள்ளி யோடாது
மழைவேண்டு புலந்து மாரி நிற்ப
     - பதிற்றுப்பத்து 13.25
செவ்வாயும்இ வெள்ளியும் அருகருகே வரும் போது அந்த ஆண்டில் மழை பெய்யாது வானம் பொய்க்கும் என்பது வானியியல் மாற்றங்களால் ஏற்படும் அறிவியல் நிகழ்வு. இவ்விரு கோள்களும் இணைவதால் வான்வெளியில் வெப்பத்தாக்கமும்இ ஈர்ப்பும் அதிகம் ஏற்பட்டு மழை பொய்க்கும் என்ற உண்மையை தமிழ்க்;கணியர்களின் அறிவை பதிற்றுப்பத்து பதிவு செய்கின்றது. 

ஆடிய லழற்குட்டத்
தாரிரு ளரையிரவின்
முடப்பனையத்து வேர்முதலாக்
கடைக்குளத்துக் கயங்காயப்
பங்கினியுய ரழுவத்துத்
தலை நாண்மீ னிலைதிரிய
நிலை நாண்மீ னதனெதி ரேர்தரத்
தொன்னாண்மீ றுறைபடியப்
பாசிச் செல்லா தூசி முன்னா
தளக்கர்த்திணை விளக்காகக்
கனையெரிப் பரப்பக் காலெதிர்பு பொங்கி
ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே
   (புறநானூறு 223-1-12)

 கூடலூர் கிழார் இயற்றிய பழந்தமிழ் பாடலில் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறப்பதற்கு முன் ஒரு கிழமைக்கு முன் தீக்குறி நிகழ்ந்ததாக கணிய குறிப்பு தருகிறார்.

அதில் மேழ ஓரையிலிருந்த ஆரல் நாளின் முதற்காலில் இருளடர்ந்த நடு இரவில் முடப்பனை என்னும் முதல் நாள் மீனின் அடியில் வெள்ளி முன்னாள் நின்றது. கடைக்குளம்  என்னும் நாள் மீனின் கடைசியில் வெள்ளி எல்லையாக விளங்கியது. பங்குனி மாதத்தின் முதல்பக்கத்தில் உச்சமாக நின்ற உத்திரம் என்னும் நாள்மீன் அவ்வுச்சியிலிருந்து சாயஇ அவ்வுத்திரத்திற்கு எட்டாவது நாள் மீனாக இருந்த குருகு அதற்கெதிராக தோன்றியது. உத்திரத்திரத்திற்கு எட்டாவது மீனாக இருந்த மான்றலை மெல்ல மறைந்தது. இந்த நிலையில் கிழக்கு வடக்குமாகிய ஒரு திசையில் சென்ற ஒரு விண்மீன்இ காற்றால் பிதிர்ந்து விழுந்தது என்று சுட்டுகின்றார்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெருமழை பெய்வதற்கும் வையை ஆற்றில் வெள்ளம் பெருகுவதற்குத் காரணமான சில கோள் நிலைகள் பற்றி பரிபாடல்:
விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப
எரிசடை எழில்வேழந் தலையெனக் கீழிருந்து
தெருவிடைப் படுத்தமூன் றொன்பதிற் றிருக்கையுள்
உருகெழு வெள்ளிவந் தேற்றியல் சேர
வருடையைப் படிமகன் வாய்ப்பப் பொருடெரி
புந்தி மிதுனம் பொருத்தப் புலர்விடியல்
அங்கி யுயர்நிற்ப வந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்குப் பாலெய்த விறையமன்
வில்லிற் கடைமகர மேவப்பாம் பொல்லை
மதிய மறைய வருநாளில் வாய்த்த
பொதியின் முனிவன் புரைவரைக் கீறி
மிதுன மடைய விடுகதிர் வேனில்
எதிர்வரவு மாரியியை கெனவிவ் வாற்றல்
புரைகெழு சையம் பொழிமழை தாழ
நேரிதரூஉம் வையைப்புனல்
        (பரி:11:1-15)
 ஆரல் (கார்த்திகை)இ மூதுரை (திருவாதிரை)இ  அடுப்பு (பரணி)இ ஆகிய விண்மீன்கள் விடைஇ மிதுனம்இ மேழ மூன்று வீதிகளில் தங்குவது முறையாகும். இவற்றில் வெள்ளிக்கோள் விடையிலும்இ  செவ்வாய் கோள் மேழத்திலும்இ புதன் கோள் மிதுனத்திலும் நின்றன. ஆரல் நாள் உச்சமாகிப் பொழுது விடிந்தது. வியாழன் காரி கோள்களின் இரட்டை வீடுகளாகிய மகர கும்பங்களுக்கு மேலே உள்ன மிதுனத்தைச் சேர்ந்தது. இவ்விதம் தோன்றிய கோள்களின் நிலைமையால் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பெருமழை பெய்து வையை ஆற்றில் வெள்ளம் பெருகிற்று.
(இதனை கி.மு. 161 ஆவணித்திங்கள் பன்னிரண்டாம் நாள் வியாழக்கிழமை என நாள் கணித்துள்ளனர்)

ஒரு முறை ஒரு பொருளால் அச்சமுற்ற ஒருவர் அப்பொருளைப் போன்ற வேறொரு பொருளைக் கண்டதும் அஞ்சுதல் இயல்பானது. கொள்ளிக் கட்டையால் அடிப்பட்ட ப+னை மின்மினிப் பூச்சிக்கு பயந்தது என்பது பழமொழி. சேணோன் என்பானது ழெகிழிக்கு (தீவட்டிக்கு)ப் பயந்த யானை வானிலிருந்து விழும் எரிகற்களைக் கண்டு அஞ்சியதாக
பெருவிற் பகழிக் குறவர்கைச் செந்தீ
வெருவிப் புணந் துறந்த வேழம் -
இருவிசும்பில் மீன் வீழக் கண்டஞ்சும்
வேல்கடமே மேலசுரர் கோன் வீழக் கண்டுகந்தான் குன்று.
     (திவ்வியப்பிரபந்தம் முதல் திருமுறை 40)

சமயத்தின் ஊடுருவலும் - ஆதிக்கமும்
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் நாள்இ கோள்களை கணக்கிட்ட தமிழ்க்கணியம் அடுத்தடுத்து வந்த சமயத்தாக்கங் கொண்;ட தமிழகத்தின் மீதான படையெடுப்புகளும் ஊடுருவல்களும் தமிழர்களை அறிவுப்பூர்வமான அறிவியல் சிந்தனையிலிருந்து வெகுவாகத் தடம் புரளும் சமூகச்சூழலை உருவாக்கியது.
சமணஇ புத்த மற்றும் வைதீக மதக் கருத்தாக்கங்களின் ஆதிக்கம் தமிழர்களின் சொந்தச் சிந்தனை வளர்ச்சிக்குத் தடையாக மாறின.
ஆரியன் துவன்றிய பேரிசை முள்ளுர்
பலர்உடன் கழித்த ஒள்வாள் மலையானது
ஒருவேற்கு ஓடியாங்கு   (நூற் - 170)
வடஆரியர்கள் படையெடுத்து வந்தபோது மலையன் அவர்களோடு பொருது விரட்டியதாகக் கூறும்செய்;தி ஆரியப் படையெடுப்பைச் சுட்டிக் காட்டுகின்றது.
வாய்த்த வந்நிரை வள்ளுவன் சொணான்
       (சீவக சிந்தாமணி 419:4)
வள்ளுவர்கள் கணியும் குறியும் சொல்லி வந்ததை, காலம் மாறியதை தமிழிலக்கியம் பதிவு செய்துள்ளது. நல்லது எதையும் செய்வதற்கு முன்னாள் வள்ளுவனிடம் (புலையனிடம்) கணியம் கேட்டறியும் வழக்கத்தை விடுத்து அதன்; தழுவலாக வேள்வி வளர்க்கும் பிராமணிடம் கேட்டறிக என்று பொருள்படும் பெருவாயின் முள்ளியார் பாடல்..
தலை இய நற்கரும் செய்யுங்கால் என்றும்
புலையர்வாய் நாட்கேட்டுச் செய்யார் தொலைவல்லா
அந்தணர்வாய் நாட் கேட்டுச் செய்க அவர் வாய்ச்சொல்
என்றும் பிழைப் பதில்.
பெருவாயின் முள்ளியார்.
ஆரியப்பார்ப்பனர் மெல்லத் தெற்கில் வந்தேறஇ  வள்ளுவரின் மதிப்பு மெல்ல குன்றத்தொடங்கியது. இந்நிலையிலேயே (புலத்தை உழுதுண்டு வந்தவர் என்னும் பொருளால் புலையர் எனப்பட்ட) பறையர் குடியை சேர்ந்த வள்ளுவர்களிடம்போய் கணியம் பார்க்கலாகாதென ஒரு பெரிய தடையை விதித்ததை இப்பாடல் மூலம் அறியமுடிகிறது.
சமுதாய வாழ்வின் மையமாகத் தன்னை வைத்திருந்த தமிழன் விதிக் கொள்கையை தன் வாழ்வின் மையமாகக் கொண்டான். முயன்றால் தன்னால் எல்;லாம் முடியும் என எண்ணி வாழ்ந்த தமிழன். தன்னால் ஆவது எதுவுமில்லை எல்லாம் விதி வழியே நடக்கும் என விதி வயப்பட்டான். அவன் வாழ்வு தேக்கநிலைபெற்றுஇ பின் வீழ்ச்சியை நோக்கி நகரலாற்று. விதியானது தமிழரின் சிந்தனைக்கு வேலியாகவுமஇ; செயலுக்கு முடக்கமாகவும்இ மனவெழுச்சிகளை அடக்கும் மருந்தாகவும் அமைவதாயிற்று. அதுவரை மண்ணைப் பார்த்து வாழ்ந்த தமிழன் விண்ணைப் பார்த்து காலம் அளந்த நிலைமாறி சமயத்தின் பிடியில் விண்ணுலக வாழ்வை நோக்கித் தம் சிந்தனையைச் செலுத்தினான். இதனால் தலைகீழ் மாற்றம் பெற்றது.
செந்திறந்த தமிழோசை வட சொல்லாகித்
திசை நான்குமாய் திங்கள் ஞாயிறாகி   
(நாலாயிர திவ்வியபிரபந்தம்) (2055-3-4)
என்ற திருமங்கை ஆழ்வாரின் வரிகள் தமிழ் அறிவியல் சொற்கள் வட சொற்களாக மாறியதை எடுத்துக் காட்டுகின்றன.
தமிழ் சமய தளத்தில் புலவர்இ பாணர்இ வள்ளுவர்இ பண்டாரமஇ; குருக்கள்இ பூசாரிஇ போற்றிஇ வேலனஇ; உவக்கன்இ புலையன்இ நம்பி எனப் பட்ட தமிழ் குலத்;தவர்கள் செல்வாக்கு இழந்தனர். அன்றைய சமூக வளர்ச்சியில் செல்வாக்கு பெற்ற ஆரியப் பார்ப்பனர்களின் தொழிலால் கீழிறக்கப்பட்டவர்களாயினர்.
வைதீக சார்பில் தங்களது வானியல் சிந்தனையில் அறிவியலை இழந்த போக்கால் மூடநம்பிக்கைகள் சோதிடம் என்ற மாயைக்குள் மக்களைத்; தள்ளியுள்ளது.

சோதிடம்
பண்டைத் தமிழர்கள் கண்ட வானியியல் அறிவைச் சமயக் கூறுகளோடு பொருத்திய ஆரியப்பார்ப்பனியம,; சோதிடம் என தனது பிழைப்பு வாதத்தைப் பெருக்கிக் கொண்டது.
மேல்சாதிக்காரர்களுக்கு மட்டுமே சோதிடம் உரைத்தது சூத்திரர்களுக்குச் சொல்லக் கூடாது என மேலாண்மையை வகுத்துக் கொண்டது.
பொதுநலன் கருதிய தமிழ்க்கணிதம் ஆரியப்பார்ப்பனிர்களின் உடமையான பிறகு அவர்களின் நலனை முன்னிறுத்தியது. உயர்குடி சாதியிடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பார்ப்பன சோதிடத்தின் போக்கு, அடித்தட்டு தமிழினத்தில் நாளுமஇ; கிழமையும் நலிந்தார்க்கில்லை என்று உரைக்கச் செய்தது.
சோதிட நூல்களில் கோள்களின் வரிசையில் சூரியனஇ; சந்திரன்இ  செவ்வாய்இ புதனஇ; வியாழன் (குரு)இ வெள்ளி (சுக்கிரன்)இ சனிஇ ராகுஇ கேது என வரிசைப்படுத்தியுள்ளனர்.
அறிவியல் உலகில் சூரியன் ஒரு நட்சத்திரம் என்று தெரிந்த பிறகும் கோள்மீனாக கருதும் போக்கு சோதிடத்தில் உள்ளது.  சோதிடக் கணக்கில் கிரகங்களின் வரிசையும் தவறு.
ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் பூமி இருக்கும் ராசிக் கட்டத்தில் கண்ணுக்குத் தெளிவாகப் புலப்படும் நட்சத்திரமே குழந்தையின் பிறந்த நட்சத்திரமாக கொள்ளப்படுகின்றது. அந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை இன்னின்ன குணாதிசயங்களை பெற்றிருப்பார்களஇ; அவர்கள் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும் என்ற சோதிடக் கணிதம் சமய உலகில் முதன்மையான இடத்தை வகிக்கின்றது.
சூரியன் வினாடிக்கு 230 கி.மீ வேகத்தில் விண்;வெளியில் ஒரு ராசிக் கட்டத்தை கடக்க ஒரு மாதம் ஆகின்றது. பூமியோடு செல்லும் நிலவு ஒரு ராசிக் கட்டத்தை வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சென்று ஒரு ராசிக் கட்டத்தில் இருந்து விட்டு நாள் பிறகு அடுத்த ராசிக்கு செல்வதாக சோதிடம் கணிதம் கூறுவது நகைப்புக்கிடமானக் கூற்றாக உள்ளது.
ஒரு குழந்தை விடை (ரிடபம்) ராசியில் ஆரல் (கார்த்திகை) நட்சத்திரத்தில் பிறந்தது என்றால், அக்குழந்தை பிறந்த நேரத்தில் கார்த்திகை நட்சத்திரம் பூமி;யிலிருந்து 410 ஒளியாண்டுகள் (ஒரு வினாடிக்கு 3 இலட்சம் கி.மீ. வேகத்தில் ஒராண்டிற்குச் செல்லும் தூரம் ஒரு ஒளியாண்டு ஆகும்) தொலைவிலிருக்கும். நூறு ஆண்டுகள் அக்குழந்தை வாழ்ந்தால் கூட அந்த நட்சத்திரத்தில் ஒளியாற்றல் பூமியில் வந்து சேர வாய்ப்பில்லை. குழந்தை பிறந்த போது கார்த்திகை நட்சத்திரத்தின் ஒளியாற்றல் இருந்ததென்றால் அக்குழந்தை அணுவாகவோ கருவாகவோ உண்டாகாத காலத்திற்கு 410 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அந்த ஒளியாற்றலை வைத்து சோதிடம் கணக்கிடப்படுவதாக கூறுவது எப்படிச் சரியாகும்? கார்த்திகை நட்சத்திரம் பல நட்சத்திரங்கள் கொண்ட கூட்டமாகும். எந்த நட்சத்திரத்தை வைத்து சோதிடம் கணிக்கப்படுகின்றது?

குழந்தை பிறந்த நேரத்தை கணக்கிடுவதற்குமஇ; பிறந்த நட்சத்திரத்திலிருந்து பலன் அறிவதற்கும் உள்ள வேறுபாட்டை உணராமல் சோதிடம் நெடுந்தொலைவிலுள்ள கிரகங்களுடன் மக்களின் வாழ்கையை இணைத்து வணிக நோக்கமுடன் சமயத்தினர் ஆதரவுடன் மக்களிடம் வேரூன்றி விட்டது.
நிலநடுக்கமஇ; மழைஇ வறட்சிஇ புயலஇ; வெள்ளம் முதலான இயற்கை நிகழ்வுகளுக்கு முன்னால் பறவைகளும் விலங்குகளும் ஊர்வனவும் எறும்புகளும் பிறவும் தம் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வதைப் போன்ற குறிப்புகளைக் கொண்டு பருவங்காலங்களிலும் பயணங்களிலும் முன்கூட்டி கூறிய குறி (நிமித்தம்) தமிழ்க்கணியர்களால் பண்டைக்காலத்தில் அறிவியல் வழிப்பட்டதாக இருந்தது.
புள்வாய்ப்புச் சொன்ன கணி முன்றில் நிறைந்தனஎன்ற சிலப்பதிகார குறிப்பும்
புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்
விதுப்புறவு அறியா ஏமக்காப்பினை” ( புறம் 20:18-19)
என்ற பாடல் வரிகள் பருவ காலங்களின் மாற்றத்தினால் பறவைகளின் இயக்க மாறுதல்களை எடுத்துக் கூறுகின்றது.
எவ்வளவு பெரிய அறிவியல் கொள்கையாயினும் அதன் அறிவியல் நிலைக்கு எதிர்ப்பட்ட அறிவுக்கு ஒவ்வா ஒரு சிறு கூறு இருக்கவே செய்யும் என்ற நிலை வளர்ந்துள்ளது. அறிவியலுக்கு பொருந்தாத மூடுமந்திரங்கள்சடங்குகள்நேரம்காலங்கள் பலன்கள் மக்களை ஆளுமை செய்கின்றன.
இதற்கான விளைநிலமாக இன்றையச் சமூகச் சூழல் நிலவுகின்றது. பிறப்பும்,,  இறப்பும்; புணர்தலும், பிரிதலும்,வினையும், பயனும் ஆகிய எதிர்மறைத் திணைகளைப் பற்றிய அறிவு ஒருபுறம் வளர்ந்த பண்டையச் சமூகத்தில் நில்லாமை, கடவுள், பிறவிக் கொள்கை போன்ற முரணான மெய்யியல் கொள்கை சமூகத்தை ஆதிக்கம் செய்யும் வர்க்கத்தாரின் செயலுக்கு உடந்தையான வைதீக போக்கு நம்பிக்கை (ஐதீகம்) என்ற அடிப்படையில் மக்களினத்தில் கொஞ்சமாவது இருக்கின்ற அறிவியல் அறிவை அகற்றும் பணிகள் மூர்க்கத்தனமாக வளர்ந்து உள்ளது.
இதனால் தான் ஒவ்வொருவரும் எந்த திசையில் படுக்க வேண்டும்இ  எந்த திசையி;ல் எழ வேண்டும்  எதை உண்ண வேண்டும்  எப்படி உண்ண வேண்டும்  எப்படி செல்ல வேண்டும் எவ்வாறு செல்ல வேண்டும் என்ற சிறு பணிகளை கூட நம்மைச் சிந்திக்க விடாமல் மதப்போர்வை போர்த்தி நம்மை அழுத்துகின்றது.

 வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் அறிவியலின் தாக்கம் நீக்கமற நிறைந்துள்ள இக்காலத்தில் அன்றாட வாழ்வின் அரைமணி நேர வாழ்க்கையைக் கூட அறிவியலின் துணையில்லாமல் நகர்த்த முடியாத சமூகச் சூழ்நிலையி;ல் வாழும் மனிதனின் சமயம் சார்ந்த கருத்தியல், அறிவியலுக்கு மாறாக முரண்படச்செய்துள்ளது.

 சூரியன் நாம் உணவு உற்பத்தி செய்யத் தேவையான இயற்கை ஒளியையும்இ  கடுங்குளிரிலிருந்து காத்துக்கொள்ளத் தேவையான வெப்பத்தையும் தருவதால் பல பகுதிகளிலும் வாழும் மக்கள் சூரியனைக் கடவுளாக வழிபடுகின்றனர். மனித இனமும் பிற உயிரினங்களும் பூமியில் வாழ்வதற்குச் சூரியனையே நம்பியுள்ளன. எனவே முற்காலம் மக்கள் முழு சூரிய கிரணத்தின் போது சூரியன் மறைவதும்  சந்திர கிரணத்தின்போது சந்திரன் ஒளியிழப்பதையும் கண்டு அஞ்சினர்.  விலங்கினங்கள் கூட அச்சமடைகின்றன. கிரணங்கள் வரயிருக்கின்ற தீமைகளுக்கு வரும் முன்னெச்சரிக்கையாகக் கருதினர்.

ஞாயிற்றின் மறைவை ஞாலத்தின்கண் உள்ள மக்கள் அனைவரும் காணவியலாது. ஒரு சில நாட்டு மக்களே காணவியலும.; ஆனால் திங்கள் மறைவை அனைவரும் காணலாம் என்பது அறிவியல் உண்மை.

கண்டது மன்னும் ஒரு நாள் அவர்மன்னும்
திங்களைப் பாம்பு கொண்டற்று.
என்ற குறளில் திங்கள் மறைவை அனைவரும் அறிந்து கொண்டதுபோல தலைவியொருத்தி தலைவனொடு ஒரு நாள் சந்தித்த செய்தியைப் பலரும் அறிந்து கொண்டனர் என்ற வானியல் செய்தியைத் தருகிறார் திருவள்ளுவர்.

விண்வெளியிலுள்ள ஒரு பருப்பொருள் தோற்றத்தை இடையில் வரும் மற்றொரு பொருள் முழுவதுமாகவோ பகுதியாகவோ தடுப்பது - ஒளியைக் குறைப்பது கிரகணம் என்றழைப்படுகின்றது. பழங்காலம் தொட்டு சூரிய கிரகணம்இ  சந்திர கிரகணம் மனிதனின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளது. சூரிய கிரகணம் அழகு நிறைந்தது மட்டுமல்ல மிகப்பெரிய அறிவியல் செய்திகளையும் உள்ளடக்கியதாக தற்கால வானியலார் கருதுகின்றனர். சந்திர கிரகணம் கண்களை கவரும் ஆர்வம் தூண்டுகின்ற நிகழ்வாக தமிழிலக்கியம் பதிவு செய்துள்ளது.

குளிர்மதி கொண்ட நாகம் கோள் விடுக்கின்றதே போல்
தளிர்புரை கோதை மாதர் தாமரை முகத்தைச் சேர்ந்த
ஒளிர் வளக்கையை செல்வன் விடுத்து
       (சீவகசிந்தாமணி 2468)
பாம்பு ஒல்லை மதியம் மறைய   (பரிபாடல் - 11)
 என்னும் வரிகள் விண்ணிலே பாம்பு பற்றிய நிலவை (சந்திர கிரகணம்) பற்றி எடுத்துக் கூறுகின்றன.
 சந்திரகிரகணம் அழகு உகந்ததாய் இருக்கின்ற அளவிற்கு ஆய்வுக்கு முக்கியத்துவம் இல்லாததாக வானியிலார் கருதுகின்றனர்.
 இராகுஇ  கேது என்ற கோள்களே இல்லை. ஆனால் மக்களிடம் இது பற்றிய நம்பிக்கைகளை வளர்த்துள்ளனர். சமயஞ்சார்ந்த இச்செய்தி அன்றாடம் வாழ்வில் மக்களின் பணிகளை முடக்கும் அளவிற்கு கருத்தியில் ரீதியான ஆளுமை கொண்டுள்ளது.

உலகில் ஆண்டுக் கணக்கிடுவதில் இரண்டு வகை இருப்பதை வானியல் அறிஞர் கில்பெர்ட் சிலெட்டர் சுட்டிக்காட்டுகிறார். ஒன்று சமயம் சார்ந்தது, மற்றொன்று சமயம் சாராதது.

சமயம் சார்ந்தது:
நிலவின் கலைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய நாட்காட்டி திங்கள் ஆண்டு ஆகும். இதனை உவா என்று குறிப்பிடுவர்.
நிலவை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டி அடிப்படையில் மாதத்தைக் கணக்கிட்டால் இரு முழுநிலவிற்கும் 291நாட்கள் ஆகும். 12 நிலவு மாதங்கள் முடிவதற்கு 354 நாட்கள் ஆகின்றன. ஆண்டிற்கு 365.242 என்ற நாட்கள் கணக்கில் சந்திர நாட்காட்டியில் 11 நாட்கள் குறைவான நாட்களுடன் சந்திரஆண்டு முடிகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பருவகால கணிப்பு, நிலவொளி கொண்டாட்டங்கள், கோள்களும் - சந்திரனும் வானில் விண்மீன்களிடையே இருந்த நிலையைச் சுட்டும் நாள் (திதி) போன்றவை ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும்.
வியாழன் ஞாயிற்றை ஒருமுறை சுற்றிவர கிட்டத்தட்ட பன்னிரு ஆண்டுகளாகும். வியாழனோடு எழவும் வியாழனோடு விழவும் செய்யும் ஒருநாள் மீன் வைத்து ஞாயிற்றை அவ்வியாழன் ஐந்துமுறை சுற்றிவர எடுத்துக்கொண்ட காலத்தை வியாழ வட்டம் என்றனர். ஐந்து சுற்றுகளுக்கு அறுபதாண்டுகள் எனப் பிரித்தனர்.
மகநாள் மீனில் வியாழன் இருக்க அதில் முழுநிலவு சேரும் நாளை மகாமகம் எனக் குறிப்பிட்டனர்.

பகல் அதிகம் உள்ளதை மேழவிழு என்றும் இருள் அதிகம் உள்ளதை துலைவிழு என்றும் வானியலில் குறிப்பிடுவர். சமயம் சார்ந்த ஆண்டுக்கணக்கில் ஞாயிறு மண்டிலம் வான்நடுவரையை வெட்டும் நாளை மேழவிழு தொடக்கமாகக் கொள்வர். சித்திரையானது நடுநாள் மீன் என்கொண்டு ஆண்டின் முதல்நாளாக (புத்தாண்டாக) சமயம் சார்ந்த ஆண்டு தமிழர்கள் மத்தியில் தற்போது நிலவுகின்றது.
முழுதிங்கள் பொருந்துகின்ற நாள்மீன் பெயர்களே சந்திர ஆண்டு நாள்காட்டியில் மாதப்பெயர்களாயின.

சமய வழியிலான பல நோன்புகளையும் வேள்விகளையும் சடங்குகளையும் ஆற்றுவதற்குத் திங்களின் பெயர்ச்சியைத் தழுவிய நாள்காட்டி பழக்கத்தில் உள்ளது.

சமயம் சாராதது :
தமிழர்கள் ஞாயிறு ஆண்டையே பெரிதும் ஆண்டு வந்தனர். ஒரு குறிப்பிட்ட உடுவிலிருந்து விலகிச் சென்ற ஞாயிறு மீண்டும் அவ்வுடுவிற்கு வந்த சேர்வதையே குறிப்பதால்  ஞாயிறு உடு ஆண்டு எனலாம். ஞாயிறு ஆண்டில் 12 ஓரைகளின் பெயர்கள் மாதப்பெயர்களாகும். ஊலகெங்கும் 12 ஓரைகளின் பெயர்களிலே மாதப்பெயர்கள் வழங்கப்படுவதை அறிய முடிகிறது. ஞாயிறு மாதங்கள் சமயம் சாரா நாள்காட்டியாக உள்ளது.

ஞாயிறு தென்திசை பயணத்தை முடித்துக்கொண்டு வடதிசை நோக்கி பயணம் செய்யும் நாளாக சுறவம் (தை) முதல் நாளை கணக்கிட்டனர். ஞாயிறு மண்டிலத்தையொட்டி வான்நடுவரை பெயருமென்ற வானியல் கணக்கு அறிவியல் பார்வையானது. இதனை உணர்ந்தே தமிழர்கள் தை பிறந்தால் வழிபிறக்கும்” “தை மாசப் பிறப்பு வருடப் பிறப்புஎன சொல் வழக்கு நிலவுகின்றது.

மக்களின் வாழ்வியலில் கடும் விளைவுகளைத் தருகின்ற கோடையும் மழையும் குளிரும் கடந்த பருவமாற்றங்களை அறிந்தே ஞாயிற்றைக் கணக்கிட்டு ஆண்டுபிறப்பைக் கணக்கிட்டனர்.
தமிழர்களின் வானியல் அறிவை இந்திய பழங்குடி மக்களின் வரலாற்றை உணர்த்தம் பண்டைய இலக்கியங்களிலும் புராண கதைகளிலும் தொன்மக் கதைகளிலும் பதிவாகியுள்ளதை அறிய முடிகின்றது.
வடசயனம், உத்திராயணம் , தென்சயனம் - தட்சிணாயணம் , மகரசங்கராந்தி என்ற பெயர்களில் வானியல் தொன்மங்கள் தெரிவிக்கின்றன.
தமிழர்கள் முதலில் சூரியன் நிழல் விழுவதை வைத்து தொடக்கத்தில் பொழுதுகளைக் கணக்கிட்டார்கள்.
பகல் இரவை நாளாகக் கணக்கிட்டனர். சந்திரனில் தெரியும் மாற்றங்களை நாட்களாகக் கணக்கி;ட்டனர்.
வானில் தெரியும் விண்மீன்களைக் கூர்ந்து கவனித்து 12 ஓரைகளாகப் பிரித்தனர். 27 நாள் மீன்களைக் கூறினர்.
வேளாண் செழிப்பின் அடையாளமாக அறுவடை நாளை ஆண்டு தொடக்கமாக வகுத்தனர்.
ஞாயிறு 12 ஓரைகள் ஊடே பயணிப்பதாகக் கணக்கிட்ட தமிழ் கணியர்கள் ஓர் ஓரைக்குள் ஞாயிறு புகுந்தவுடன் காலையாயினும் நண்பகாயினும் இரவாயினும் தமிழரின் மாதம் பிறந்து விடுவதாக வகுத்தனர்.
ஞாலத்தின் நடுவரையுடன் ஒரு குறிப்பிட்ட மைவரை சேருகின்ற இடத்தை வைத்தே ஞாயிறு எழும் வேளையை தமிழர்கள் கணக்கிட்டனர்.
தமிழர்களின் வானியல் அறிவு முழு தற்சார்பு கொண்டதாக திகழ்ந்துள்ளது என்பதனை தமிழிலக்கியங்களும் வானியல் வேர்ச்சொற்களும் நிரூபிக்கின்றன.

இன்று நாம் சந்திக்கும் நாள்காட்டி சமய நெறி சார்ந்தவர்களால் வகுத்ததால் திதி, விழாக்கள், கொண்டாட்டங்கள் ஆண்டுக்கு ஆண்டு  மாறுபட்டு வருவதும் பருவம் தவறி இடம் பெறுவதும்  குழப்பங்களும் நிறைந்ததாக உள்ளது. இது தமிழ்க் கணியர்கள் வகுத்த காலம்காட்டியை புறக்கணித்ததேயாகும்.


.    உதவிய நூல்கள்
1. வள்ளுவத்தின் வீழ்ச்சி         -       வெங்காலூர் குணா
2. தமிழக வானவியல் சிந்தனைகள்  -   முனைவர் ப. ஐயம்பெருமாள்
3. முதலாவது அறிவியல் தமிழ்
மாநாட்டு மலர் 2006     -  பன்னாட்டுத் தமிழ் நடுவம் வெளியீடு

4. சோதிட மறுப்பும் வானவியல்
சிறப்பும் -  கவிஞர் தி. பொன்னுசாமி
   5. வானியலும் தமிழரும் -  ம.சோ.விக்டர்

**Satapatha Brahmana (S.Br) I.6.1.1-3; Swami Satya Prakash Sarasvati, Founders of Sciences in Ancient India, Part I, Govindram Has anand Nai Sarak, Delhi, 1986, p 77.

Now the seasons were desirous to have a share in the sacrifice among the gods and said, “Let us have a share in the sacrifice! Do not exclude us from the sacrifice! Let us have a share in the sacrifice!” The gods, however, did not approve of this. The gods not approving, the seasons went to the Asuras, the malignant, spiteful enemies of the gods. Those (Asuras) then throve in such a manner that they ( the gods) heard of it; for even while the foremost (of the Asuras) were still ploughing and sowing, those behind them were already engaged in reaping and threshing: indeed even with out tilling, the plants ripened forthwith for them.




        ஆ. இரவிகார்த்திகேயன்
            9443736444.










1 comment:

முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' said...

அரிய வானியல் கணிதத் தொகுப்பு! பயனுடையது! பாராட்டுகள்!

Post a Comment